பகல் – இரவு கால அளவுகள்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஒரு கோளில் வாழ வேண்டும் என்றால் பகல் – இரவு கால அளவுகள் என்பது மிக மிக முக்கியமானது. ஏனென்றால் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என ஒவ்வொரு உயிரினங்களும் தங்களது வாழ்வியல் வளர்ச்சிக்கு விழித்திருத்தல், ஓய்வெடுத்தல், உறங்குதல் போன்ற நிகழ்வுகளுக்கு பகல் – இரவு (பகல் – கூடுதலான வெப்பம் & வெளிச்சம், இரவு – குறைவான வெப்பம் & இருள்) கால அளவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்திருக்கிறது. இந்த மகத்துவம் வாய்ந்த உண்மையானது நாம் இந்த பூமியில் வாழ்ந்த அனுபவத்தின் வாயிலாக பெற்ற மிக உயர்ந்த வாழ்வியல் படிப்பினையாகும். “எப்பொழுது நாம் இந்த விழித்திருத்தல், ஓய்வெடுத்தல், உறங்குதல் போன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தரவில்லையோ அப்பொழுதே நமது வாழ்வு இயற்கையோடு இணைந்த முழுமையான வாழ்வாக அமையாது என்பதை அறிய வேண்டும். அல்லது அமைத்துக்கொள்ளவில்லை என்பதை உணர வேண்டும்”. இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழ்வதற்கு பூமியே மாதிரி வடிவமாக அமைந்திருக்கிறது என்பதை நன்கு அறிவோம். ஆகவே பூமியில் நிகழும் கால (பகல் – இரவு) அளவை ஒட்டியே வாழ்வாதாரத்தை உருவாக்க இயலும் என்பதை அறியவேண்டும்.

சந்திரனில் பகல் – இரவு நிகழ்வுகள்:
சந்திரனில் பகல் – இரவு நிகழ்வுகளை நடை முறையில் இதுவரையில் சரியாக குறிப்பிட இயலவில்லை என்பதை அறிவோமா?
ஆம், இது வரையில் முழுமையாக குறிப்பிடவில்லை என்பதை அறிய வேண்டும்.

நாம் அறிய வேண்டியது:
சந்திரனில் பகல் – இரவு நிகழ்வுகளை அறிய சந்திரனின் சுழற்சி இயக்கங்களை நாம் அறிய வேண்டியது அவசியம், அவசியம் ஆகும். ஏனென்றால் சந்திரனின் சுழற்சி இயக்கத்தில் பூமி – சூரியன் – சந்திரன் என மூன்று கோள்களின் சந்திப்பு நிகழ வேண்டியிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

சந்திரனின் சுழற்சி இயக்கம் மிக மிக மெதுவான வேகத்தில் சுழல்வது என்பது சந்திரனின் பகல் – இரவு நிகழ்வுகளை நமக்கு புரியாத புதிராக புரிய வைக்கிறது.

ஒளி – இருள் நிகழ்வுகள்:
சந்திரன் தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருகிற நிகழ்வில் சுற்றி வருகிற போது பூமியின் சுற்று வட்ட பாதையில் சுற்றி வர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

சந்திரன் மீது சூரியன் தமது ஒளியை (வெளிச்சம்) வெளிப்படுத்துகிற பகுதிகள் வெளிச்சமயமாகிறது. சந்திரனில் இந்நிகழ்வு பகல் வேளையாகும்.

சந்திரன் மீது சூரியன் தமது ஒளியை பயன்படுத்தாத பகுதிகள் இருள் மயமாகிறது. சந்திரனில் இந்நிகழ்வு இரவு வேளையாகும்.

கவனிக்கப்பட வேண்டியவை:
பூமியில் பகல் பொழுது என்பது 12 மணி நேரமாகவும், இரவு பொழுது என்பது 12 மணி நேரமாகவும் 24 மணி நேரத்தில் நிகழ்கிறது. அதாவது பூமி தம்மை தாமே சுற்றி கொள்வதற்கு எடுத்துக்கொள்ள கூடிய நேரமே 24 மணி நேரமாகிறது. நம்மால் காலம் காலமாக காண்பது பூமியில் 12 மணி நேரம் பகல் பொழுதையும், 12 மணி நேரம் இரவு பொழுதையும் வாழ்வியலாக வாழ்ந்து அனுபவித்து வருகிறோம். இவ்வேளையில் தான் பூமியில் ஒவ்வொரு நாளும் பகல் பொழுது என்பது சூரியனுடைய வெளிச்சம் 12 மணி நேரத்தில் நிகழ்கிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது. ஆனால் பூமியில் ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் 12 மணி நேரம் முழு இரவு (இருள்) நேரமாக இருக்கிறது என்று சொல்ல இயலாது. ஏனென்றால் பூமியில் அமாவாசை என்ற ஒரு இரவு பொழுது மாத்திரமே இருள் மயமாக காட்சி அளிக்கிறது. பூமியை பொறுத்த வரை பகலில் வெளிச்சம் ஒவ்வொரு நாளுக்கும் சொந்தமாகிறது. அதேசமயம் பூமியை பொறுத்த வரை இரவில் இருள் என்பது 30 நாட்களுக்கு ஒரு முறை தான் நடைபெறுகிறது என்பதை அறிய வேண்டிய அவசியம் இருக்கிறது. இதர 29 நாட்களும் பூமியில் இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேர அளவுகள் சந்திரன் தமது வெளிச்சத்தை வெளிப்படுத்தி இரவில் இருளின் ஆளுமைக்கு சுதந்திரம் தருகிறது. இந்நிகழ்வில் இருந்து தான் சந்திரனின் சுழற்சி இயக்கத்தை (பகல் – இரவு) அறிய முடிகிறது.

பகல் – இரவு சுழற்சி முறை:
சந்திரனின் மேற்பரப்பில் சூரிய வெளிச்சம் ஒரு குறிப்பிட்ட பகுதி வரை வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. சந்திரனின் மேற்பரப்பில் சூரிய வெளிச்சம் படாத இதர பகுதி (மறுபக்கம்) இருள் மயமாகிறது. “ஒவ்வொரு கோளிலும் இவ்வாறு தான் பகல் – இரவு நிகழ்வுகள் நிகழ்கிறது “.
சந்திரனின் சுழற்சி வேகமானது மிக மிக குறைவான வேக அளவில் (தம்மை தாமே சுற்றி வரும் கால அளவு 28 நாட்கள்) சுழல்வதால் சந்திரனில் பகல் – இரவு கால அளவை நம்மால் சராசரி தீர்மானிக்க இயலாமல் போகிறது.

சந்திரனில் பகல் பொழுது என்பது 14 நாட்களுக்கு ஒரு முறை சரிபாதி (சந்திரனில் சரிபாதி: ஒரு பக்கம் – மறுபக்கம்) அளவு நிகழ்கிறது. அதேசமயம் பகல் பொழுது ஏற்படுகின்ற அந்த நாளில் சந்திரனின் மறுபக்கம் இரவு (இருள்) பொழுதாக காட்சி அளிக்கிறது.
“சந்திரனின் மறுபக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை கேள்வியாக/தெரியாத ஒரு பதிலாக நிணைத்து கொண்டிருக்கும் விஞ்ஞான கட்டமைப்பிற்கு இது தான் உரிய பதிலாகிறது என்பதை அறிவிப்போம்”.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of