பூமி – தெரிந்து கொண்டது

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பூமியில் தெரிந்து கொண்டது என்பது தெரிந்து கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது. மேலும் தெரிந்து கொள்வதற்கு தேவையானதாகவே இருக்கிறது.

இயற்கையில் தேவை:
இயற்கை கட்டமைப்பில் தென்றல் (தாவரங்களின் தொடர்பில் வெளிப்படுவது, நீரின் தொடர்பில் வெளிப்படுவது – கடல் காற்று), மழை (நீர் ஆவியாதல் – மழையாக/ பனியாக பொழிதல்), தாமாகவே வளரும் தாவரங்கள் (காடுகள்/ சமவெளிகள் என மண் அமைப்பு முழுவதும்), தங்களுக்கு தேவையானதை தாமாகவே அறிந்து வளரும் உயிரினங்கள் (நீர்/நிலம் என அனைத்திலும்), இயற்கையில் உருவாகும் புதிய பரிமாணங்கள் என ஒவ்வொன்றும் மனித வாழ்வியலுக்கு தேவையானதாக, அவசியமானதாக அமைகிறது. அதாவது மனித சமுதாயம், உயிரினங்கள், தாவரங்களின் வாழ்வாதார அடிப்படை அமைப்புகள் உருவாகிட, உருவாக்கிட, வாழ்ந்திட, வளர்ந்திட, வாழ்வாதாரம் தொடர்ந்திட, அறிவியல் வாழ்வு வளர்ச்சி அடைந்திட, ஆன்மீக வளர்ச்சி மேம்பாடு அடைந்திட, உயிரியல் வாழ்வு உயர்ந்திட, பிரபஞ்சம் முழுவதும் வாழ்வாதாரம் தொடர இயற்கையில் இயற்கை தொடர்பை நலமுடன், வளமுடன் தெரிந்து கொள்வோம்.

இயற்கையில் தேவையற்றது:
இயற்கை கட்டமைப்பில் உருவாகும் பெருமழை, வெப்ப வறட்சி, கடும் குளிர், புதைகுழி, தீ குழம்புகள், நில நடுக்கம், புயல் காற்று, வைரஸ் கிருமிகள் ……. போன்றவை மனித வாழ்வியலுக்கு அவசியமற்றதாக மற்றும் பேரழிவை தருவதாக அமைகிறது. இருப்பினும் இயற்கை கற்றுத்தரும் பாடமாக உள்ளது.
இயற்கை தொடர்பில்:
* வாழ்வாதாரம் உருவாக்குகிற
* வாழ்ந்து பழகுகிற
* இயற்கை இயல் அமைப்புகளில் இயல்பாகிட
* செயற்கை அமைப்புகளில் செவ்வணே செழித்தோங்கிட உருவாக்கப்படும் ஒவ்வொரு முயற்சி கால கட்டங்களிலும் இயற்கையில் உருவாகும் முரண்பாடுகள், செயற்கை சுத்திகரிப்பு பற்றாக்குறை முறைகள் வாழ்வாதார அடிப்படை கட்டமைப்பில் கலந்துவிடாத வகையில் பாதுகாத்தால் வாழ்வு செழிக்கும். வாழ்வாதார பரிணாம வளர்ச்சி மேன்மையடையும்.

மேற்கூறியவாறு இல்லாமல் உருவாக்கப்படும் ஒவ்வொரு முயற்சி கால கட்டங்களிலும் இயற்கையில் உருவாகும் முரண்பாடுகள், செயற்கை சுத்திகரிப்பு பற்றாக்குறை முறைகள் வாழ்வாதார அடிப்படை கட்டமைப்பில் கலந்துவிடுவதை சீரமைக்காது போனால்
மனித வாழ்வாதாரம்,
உயிரினங்களின் வாழ்வாதாரம்,
தாவரங்களின் வாழ்வாதார தொடர் நிகழ்வுகள் பலவீனம் அடைவதும், பாதிப்புகளால் சரிவடைவதும், தொடரும் தொடர்புகள் ஆரோக்கியம் – ஆரோக்கியம் இன்மை, சந்தோஷம் – துக்கம், வளர்ச்சி – வீழ்ச்சி, தெளிவு – குழப்பம், முழுமை – முழுமையின்மை …….. போன்ற இரட்டிப்பு வாழ்வியல் வாழ்வது வாழ்க்கையின் பழக்கமாகிவிடும்.

மேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Please follow and like us:

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of