கோள்களில் பஞ்சபூதங்களின் வாழ்வாதாரம்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது.
பஞ்ச பூதங்கள்
1. ஆகாயம்
2. வெப்பம்
3. காற்று
4. நீர்
5. மண் ஆக ஐந்தின் கூட்டமைப்பால் அமைந்திருக்கிறது,

1. ஆகாயம்

பஞ்ச பூதங்கள் ஐந்தில் ஆகாயம் பிரபஞ்சத்தில் முழுவதும் முழுமையாக அமைந்திருக்கிறது. ஆகாயமே பிரபஞ்சத்தின் உள் கட்டமைப்பிற்கும் – வெளி கட்டமைப்பிற்கும் ஆதார அமைப்பாக அமைந்திருக்கிறது. அதுபோலவே பாதுகாப்பு வலயத்திற்கும் ஆதார அமைப்பாக அமைந்திருக்கிறது. மேலும் பிரபஞ்ச ஈர்ப்பு விசைக்கும் ஆதார அமைப்பாக ஆகாயமே அமைந்திருக்கிறது.

2. வெப்பம்

பஞ்ச பூதங்கள் ஐந்தில் வெப்பம் பிரபஞ்சம் முழுவதும் முழுமையாக அமைந்திருக்கிறது.
* பஞ்ச பூதங்கள் ஐந்தில் வெப்பம் தமது உஷ்ணத்தின் தன்மையை முழுமைபடுத்துவதற்கு உதவுகிறது.
* பஞ்ச பூதங்கள் ஐந்தில் வெப்பத்தின் அளவு என்பது பிரபஞ்சம் முழுவதும் ஒரே அளவாக இருப்பதில்லை.
* பஞ்ச பூதங்கள் ஐந்தில் வெப்பம் இடத்திற்கு இடம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. வெப்பத்தின் தன்மையும் (உஷ்ணம், வெளிச்சம்) இடத்திற்கு இடம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

3. காற்று

பஞ்ச பூதங்கள் ஐந்தில் காற்று பிரபஞ்சம் முழுவதும் முழுமையாக அமைந்திருக்கிறது
1. பிரபஞ்சம் முழுவதும் முழுமையாக சுழல்வதற்கு ஆதாரமாக அமைகிறது.
2. பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்குவதற்கு காற்றே பிரதானமாக அமைந்திருக்கிறது.
3. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் இயங்குவதற்கு காரண, காரியமாக அமைந்திருக்கிறது.
4. பிரபஞ்சத்தில் உள்ள உயிரியல் அமைப்புகள் அனைத்திற்கும் உயிராதார அமைப்பாக அமைந்திருக்கிறது.

4. நீர்
பஞ்ச பூதங்கள் ஐந்தில் நீர் பிரபஞ்சம் முழுவதும் முழுமையாக அமைந்திருக்கிறது என்றால் நீரின் (குளிர்) தன்மையே அதற்கு காரணமாக அமைகிறது.
* நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் வெப்பம் முழுவதும் பரவியிருக்கிறது. அவ்வாறு பரவியிருக்கும் வெப்பத்தை இடத்திற்கு இடம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப குளிர வைப்பது நீரின் தன்மையாகும்.
* பஞ்ச பூதங்கள் ஐந்தில் நீர் மாத்திரமே உருமாறும் (திரவம் – திடம் – வாயு) தன்மை கொண்டதாக அமைந்துள்ளது.
* பஞ்ச பூதங்கள் ஐந்தில் நீர் (திரவம்) மண் எனும் அமைப்பை தமது இருப்பிடமாக கொண்டிருக்கிறது.
* பிரபஞ்சத்தில் நீர் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.
* பிரபஞ்சத்தில் நீர் குளிரின் தன்மையை முழுமைபடுத்துவதற்கு உதவுகிறது.

பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்தும் தனித்தும், இணைந்தும் இருப்பதை அறியலாம்.

கோள்களில் பஞ்ச பூதங்கள் ஐந்தும் தனித்தும், இணைந்தும் இருப்பதை அறியலாம்.

மேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of