இரவு – 10 மணி நேரம் ஒளி (சந்திரன்)

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பூமியில் பகலில் ஒளி தர சூரியனும், இரவில் ஒளி தர சந்திரனும் இயற்கை கட்டமைப்பில் இருக்கிறது என்பதை அறிவோம். தற்போது (சந்திரன் சில சீரமைத்தலுக்கு முன்பு) உள்ள சூழ்நிலைகளை காலங்காலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். அதாவது தினசரி பகலில் சூரிய ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இரவில் ஒளி தருவதற்கு சந்திரன் இருக்கிறது. இருப்பினும் சந்திரனின் ஒளியோ சூரிய ஒளி போல்
இரவு முழுவதும் இருப்பதில்லை. அதற்கு காரணம் சந்திரனின் சுழற்சி முறையும், அதற்குரிய கால அளவுகளுமே ஆகும். அதாவது சந்திரனின் சுழற்சி கால அளவு தோராயமாக ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 28 நாட்கள் ஆகிறது. சந்திரனின் சுழற்சி முறையானது பூமியின் சுழற்சி முறையை விட மிக மிக மெதுவான வேகமாகும்.

சந்திரனின் சுழற்சி முறை தோராயமாக 28 நாட்கள் ஆகிறது. பூமியின் சுழற்சி முறை 24 மணி நேரமாகும். பூமியானது தனது சுழற்சி முறைகள் (24 மணி நேரத்தில்) 12 மணிநேரம் பகலாகவும், 12 மணிநேரம் இரவாகவும் அமைந்திருக்கிறது.

சந்திரன் தமது 28 நாள்கள் தொடர்ச்சியை நாம் சந்திரனில் ஒரு நாள் என்று அழைக்கலாம். அதே சமயம் 28 நாட்கள் (பூமியின் நேரப்படி) என்பதில் சந்திரனில் ஒரு நாள் என்றால் அதில் 14 நாட்கள் பகல் என்றும், 14 நாட்கள் இரவு என்றும் அழைக்க இயலாது. ஏனென்றால் அமாவாசை முழு இரவாக இருக்கிறது. பௌர்ணமி இரவில் பகலாக காட்சியளிக்கிறது. இதர பிற தினங்களில் குறிப்பிட்ட நேர அளவுகளோ வளர்பிறை, தேய்பிறை காலங்களாக சந்திரனின் வெளிச்சத்தைக் காண இயலுகிறது. அப்படி என்றால் சந்திரனில் அமாவாசை தினத்தில் இரவு பொழுதில் இரவு என்றால், பவுர்ணமி தினத்தில் இரவு பொழுதை பகல் என்று கூறலாமா?

மேலும் சந்திரனில் 14 நாட்களை உள்ளடக்கயது இரவு (அமாவாசை) என்றும் , 14 நாட்களை உள்ளடக்கியது பகல் (பவுர்ணமி) என்றும் கூறலாமா? இவ்வாறு இருக்கையில் இந்நிலையை பூமியில் ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல் என்றும் அதில் காலை, மதியம், மாலை என குறிப்பிடுவது போல் சந்திரனில் 14 நாட்கள் அடங்கிய பகல் பொழுதை காலை, மதியம், மாலை என்று குறிப்பிட இயலுமா? அதுபோலவே 14 நாட்கள் அடங்கிய இரவு பொழுதை முன்னிரவு, நள்ளிரவு, பின் இரவு என்று கூற இயலுமா என்றால் அதுவும் இயலாது என்பதை அறிய வேண்டும். ஏனென்றால் வளர்பிறை, தேய்பிறை காலத்தில் சந்திரனின் ஒளி பிரகாசம் கால அளவில் மாறுபடுகிறது என்பதை அறிய வேண்டும். இவ்வாறு பூமிக்கு இரவில் சந்திரன் வெளிச்சத்தை கொடுத்து உதவினாலும் சந்திரன் தமது சூழற்சி வேக அளவால் கால நேர அளவுகளையும், பகல், இரவு பொழுதையும் தெரிந்து கொள்ள இயலாத நிலை உருவாகிறது.

சந்திரனின் வாழ்வாதாரம் சீரமைப்புகளுக்கு பின்னால் சந்திரனின் சுழற்சி வேகம் 28 நாட்களில் (பூமியின் நேரப்படி) இருந்து 28 மணி (சந்திர கடிகார அளவுப்படி) நேரமாக குறைகிறது எனவே சந்திரனில் பகல் 14 மணி நேரமாகவும் இரவு 14 மணி நேரமாகவும் மாறுவதால் பூமியில் சந்திர ஒளி பிரகாசம் தொடர்ச்சியாக 10 மணி நேரம் ஒவ்வொரு நாளும் இருக்கும் என்பதை அறிவோம். அதேசமயம் பூமியில் இரவு நேர இருள் என்பது 2 மணி நேரமும் (18 மணி முதல் 20 மணி வரை) பிறகு இரவின் இறுதியில் 2 மணி நேரம் (6 மணி முதல் 8 மணி வரை) முழு இருள் மயமாக பூமி முழுவதும் அமையும் என்பதை அறியலாம்.

சந்திரனின் வாழ்வாதார சீரமைப்பால் பகலில் சூரிய ஒளியில் 10 மணிநேரம் பூமி ஜொலிப்பது போல், இரவில் 10 மணி நேரம் ஜொலிக்கும் என்பதை அறியலாம்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of