இயற்பியல் முறையில் சுழற்சியல்

அனைவருக்கும் வணக்கம்.

சந்திரனில் உயிரியல் வாழ்வாதார முறை என்பது முழுவதும் விஞ்ஞான இயற்கை கட்டமைப்பு முறைகளில் தான் நிகழும் என்பதை அறிவோம்.

சந்திரனில்:
இயற்பியல் முறையில் சுழற்சி,
வேதியியல் முறையில் சுத்திகரிப்பு,
உயிரியல் முறையில் வாழ்வியல் எனும் விஞ்ஞான கட்டமைப்பு முறைகளில் உருவாக்குகிறோம்.

சந்திரன் ஆய்வு பொது தகவல்:

சந்திரனில் விஞ்ஞான ரீதியாக உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றால் அந்நிகழ்வு இயற்கை முறையில் தான் நிகழும் என்பதை அறிய வேண்டும்.

நாம் வாழும் பூமியில் இருந்து சந்திரனை பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதில்,
* பூமியில் இருந்து இயல்பான ஆய்வுகள்.
* பூமியில் இருந்து விஞ்ஞான ரீதியான ஆய்வுகள்.
* சந்திரனில் இருந்து சாட்டிலைட் ஆய்வுகள்.
* சந்திரனில் அவ்வப்போது விஞ்ஞானிகள் வாயிலாக நேரடியாக ஆய்வுகள் என தொடர்ந்து நடைபெறுகிறது. அதில் இதுவரை சந்திரனின் சுழற்சி இயக்க கால அளவு, சந்திரனின் ஈர்ப்புவிசை பற்றாக்குறை, வெப்பம் – குளிர் நிலை, சுவாசக்காற்று பற்றாக்குறை, உயிரியல் வாழ்வாதாரம் இதுவரை இல்லை ..‌…. போன்றவை தெரிய வந்திருக்கிறது. மேலும் நீரின் இருப்பிடத்தை அறியும் ஆய்வு முறைகள், சந்திரனின் மறுபக்கத்தை அறியும் ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்கா ரஷ்யா இந்தியா ஜப்பான் சீனா போன்ற நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளின் ஆய்வுகள் தொடர்கிற இதே வேளையில் தான்
நமது ஆய்வும் தொடர்கிறது.

நமது ஆய்வு முறை:
நமது ஆய்வு முறையும் இதுவரை சாட்டிலைட் வாயிலாகவும், விஞ்ஞானிகள் வாயிலாக கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தான் நிகழ்கிறது. அதாவது கோள் ஈர்ப்பு விசை பற்றாக்குறை, சுழற்சி கால அளவு, சுவாச காற்று பற்றாக்குறை, வெப்பம் – குளிர் போன்ற ஆய்வுகளின் மூலங்களை விரிவாக ஆராய்ந்து பூமியில் இயல்பாக இயங்கும் இயற்கை கட்டமைப்புகளை வைத்து நமது ஆய்வுகள் தொடரப்படுகிறது. இருப்பினும் நமது ஆய்வியல் முழுமையக தீர்வு காண சந்திரனின் இயற்கை இயக்க அமைப்பு முறைகளை முறையாக வைத்து தான் ஆய்வுகளை மேற்கொள்கிறோம். இயற்கை இயக்க கட்டமைப்புகளின் தொடர்ச்சியாக சந்திரனில் வாழும் நுண்ணுயிர்களின் வெளிப்பாடு இயக்கத்தை மேற்கொள்ளும் நமது ஆய்வுகளை தொடர்கிறோம்.

சந்திரனில் நுண்ணுயிர்களின் வாழ்வாதாரத்தை உருவாக்கிய பிறகே பூமியில் இருந்து நுண்ணுயிர்கள், தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என வாழ்வாதார கட்டமைப்பு முறைகளை உருவாக்கிட நமது ஆய்வு முறைகளை தொடர்ச்சி ஆக்குகிறோம்.

நமது ஆய்வில் சந்திரனின் சுழற்சி இயக்கத்தை முறைபடுத்துவதே இயற்கை கட்டமைப்பை சீரமைக்கும் முறையாக முதன்மை படுத்துகிறோம். இவ்வாறு நமது ஆய்வில் கூறப்படுவதற்கு உரிய காரணமே சந்திரனின் சுழற்சி கால அளவு தோராயமாக 28 நாட்களாக இருப்பதுவே ஆகும். அதாவது பூமியில் 24 மணி நேர வாழ்வியலை முதன்மையாக கொண்டுள்ள உயிரியல் அமைப்பு முறைகளை சந்திரனில் 28 நாட்கள் சுழற்சி இயக்க அமைப்பில் வாழவைப்பது இயலாத காரியம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். மேலும் சந்திரனில் கூறுவது என்னவெனில் சந்திரனில் கோள் ஈர்ப்பு விசை பற்றாக்குறையும், பூமியை விட பல மடங்கு கூடுதலாக உள்ள வெப்பம் – குளிர் நிலையில் பூமியில் உயிரியல் அமைப்புகளை சந்திரனில் வாழ வைக்க முயற்சிப்பது இயலாத காரியமாகும் என்பதை அறிவுறுத்த விரும்புகிறோம். இவ்வாறு உள்ள சூழ்நிலையில் நமது தீர்வாக சந்திரனில் உயிரியல் வாழ்வாதார முறை எவ்வாறு இருக்கிறது இருப்பதை அறிவிக்க விரும்புகிறோம்.

தீர்வு இயற்பியல் முறை:
சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டுமென்றால் சந்திரனின் சுழற்சி இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும்.

முறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள்:

1. அறியவேண்டியவை (மண் பாதிப்பு)

ஒரு கோளில் இயற்கை கட்டமைப்பு அமைந்திருக்கிறது என்பதை அறிய அங்கு மண்ணும், நீரும் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பதை அறிவதாகும்.

சந்திரனைப் பொறுத்தவரை மண் இருக்கிறது. நீரின் இருப்பிடம் தெரியாது இருக்கிறது. மண்ணின் தன்மையை ஆய்வு செய்கிற பொழுது உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்பதை தெரியப்படுத்துகிறது. காரணம் மிக நீண்டகாலமாக மண் அமைப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். ஏனென்றால் சந்திரனில் 130 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் மண் தாக்கப்படுவதே ஆகும்.

தீர்வு – இயற்பியல் முறை:
சந்திர மண்ணில் வெப்பத்தை சீரமைத்தால் மண் வெப்பத்தால் தாக்கப்படுவது குறையும்.

வெப்பத்தை சீரமைக்க நீரின் இருப்பிடம் அறிய வேண்டும்.

வெப்பத்தால் தாக்கப்படும் மண்ணை நீர்கொண்டு சுத்திகரிப்பு செய்ய (மண் – நீர் சுத்திகரிப்பு முறை) வேண்டும். வளமான முறையிலும் நீரால் – மண்ணும் – மண்ணால் – நீரும் இயல்பாகவும், இயற்கை முறையிலும் சுத்திகரிப்பு செய்தால் அம்மண்ணில் உள்ள வாழ்வாதார தடைகள் அனைத்தும் நீங்கும்.

2. சுவாச இயல் காற்று பற்றாக்குறை:

சந்திரனைப் பொருத்தவரை சுவாச இயல் காற்று பற்றாக்குறை உருவாவதற்கு காரணமே அங்கு நிலவும் வெப்பமே ஆகும்.

தீர்வு இயற்பியல் முறை:

சந்திரனில் வெப்பத்தை சீரமைக்க நீர்நிலை அறிதல் வேண்டும். நீர் கொண்டு மண் – நீர் சுத்திகரிப்பு செயலால் வெப்பம் சீராகும். வெப்பம் சீராகிற போது வெப்ப காற்று ஈரப்பதம் நிறைந்த சூழ்நிலைகளோடு இணைவதால் வெப்ப காற்று இயல்பு நிலைக்கு உரியதாக மாறும். அதாவது மண் – நீர் சுத்திகரிப்பு முறையால் காற்றில் உள்ள வெப்பம் குறைந்து நீரின் தன்மையோடு (ஈரப்பதத்தோடு) இணையும். ஆகவே வெப்ப காற்று சீரமைப்பு பெறுகிற போது நீர் ஆவியாதல் நிகழ்த்துவங்கும். நீர் ஆவியாகுதல் வாயிலாக மழை, பனி பொழிய ஆரம்பிக்கும். இதன் வாயிலாக சந்திரனில் சுவாச இயல் காற்றின் தன்மை இயற்கை கட்டமைப்போடு இணைந்து இயங்குதல் நடைபெறும் என்பதை அறியலாம்.

3. கோள் ஈர்ப்புவிசை பற்றாக்குறை:

மிக நீண்ட நெடுங்காலமாக சந்திரனில் சூரிய வெப்பத்தால் மண் தனது மூலக்கூறுகள் வரை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக மண்ணின் மேற்கட்டமைப்பு துவங்கி உள்கட்டமைப்பு வரை வறட்சித் தன்மையால் பாதிக்கப்படுகிறது. இவ்வறட்சி தன்மையால் மண் இறுக்கத்தன்மையை பெறுகிறது. எனவே சந்திரனில் மேற்கட்டமைப்பு முதல் உள் கட்டமைப்பு வரை பஞ்ச பூதங்களால் இணைந்து இயங்கும் இயக்கத் தன்மை குறைகிறது. ஆகவே சந்திர மண்ணில் கோள் ஈர்ப்பு விசை பற்றாக்குறை தன்மை உடையதாகவே வெளிப்படுகிறது.

தீர்வு : இயற்பியல் முறை

சந்திரனின் கோள் ஈர்ப்பு விசை பற்றாக்குறையை சீரமைத்திட மழை நீர் உருவாகுதல் அவசியமாகிறது.
சந்திரனில் மழை நீர் உருவாகி மண்ணின் வெப்ப தன்மையை சீரமைக்கிறது. அதே வேளையில் குளிர்ச்சி தன்மையால் மண் அமைப்பு நிறைவுபெறுகிறது. அதாவது சந்திர மண்ணில் வெப்பம் – குளிர்ச்சி தேவையான அளவு இயல்பு நிலையை பெறுகிறது. இதனால் சந்திரனில் உள் – வெளி, வெளி – உள் கட்டமைப்பில் பஞ்சபூத கலவைகள் இணைந்து இயங்க ஆரம்பிக்கிறது. இந்த நிலை தான் சந்திரனின் இயற்கை கட்டமைப்பு சீரமைக்க படுவதற்கு உரிய வாய்ப்புகளை பெறுகிறது. ஆகவே சந்திரனின் ஈர்ப்பு விசையில் மாற்றம் உருவாகிறது. அதாவது சந்திரனின் இயற்கை கட்டமைப்பு உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய ஈர்ப்பு விசையை (கோள் ஈர்ப்பு விசை) பெறுகிறது.

இயல்பு நிலை
சந்திர மண்ணில் கோள் ஈர்ப்பு விசை சீராகும் நிலை உருவாவதால் மண்ணின் மூலக்கூறுகள் பஞ்ச பூத கலவைகளால் இயல்பு நிலையை அடைகிறது.

4. உயிரியல் வாழ்வாதாரம் இல்லை:

விஞ்ஞான ஆய்வு:
சந்திரனில் துவக்க கால விஞ்ஞான ஆய்விலும், தொடரும் ஒவ்வொரு ஆய்விலும் உயிரியல் வாழ்வாதாரம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்றே கூறுகிறது. நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு ஏற்புடைய முறையில் சந்திர மண் அமைந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

நமது ஆய்வின் கூற்று:
சந்திரனில் கடும் வெப்பம் (130 டிகிரி செல்சியஸ்) & கடும் குளிர் (மைனஸ் 180 டிகிரி) நிகழ்வதால் அங்குள்ள மண்ணின் மூலக்கூறுகள் உடைந்து போகும் அளவிற்கு பாதிப்புகள் உருவாகிறது. இதனால் சந்திர மண்ணின் மேற்பரப்பில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியம் இல்லை என்றே கூறலாம். அதேசமயம் சந்திர மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் (பிரபஞ்சம் முழுவதும் வாழும் நுண்ணுயிர்கள்) கடும் வெப்பம் மற்றும் குளிர் தாக்குதலின் சூழ்நிலையால் மண்ணின் உட்பரப்பில் சென்று வாழ்கிறது என்பதை அறிவது அவசியமாகிறது.

தீர்வு இயற்பியல் முறை:
ஒரு கோளில் உள்ள மண்ணில் உயிரியல் வாழ்வாதாரம் திகழவேண்டும் என்றால் மண் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். அங்குள்ள நீர் அம்மண்ணை இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழ்வளிக்க வேண்டியதாய் அமையவேண்டும். அம்மண்ணில் நிலவும் வெப்பமும், காற்றும், குளிரும் ஏற்புடையதாக அமைய வேண்டும். அவ்வாறு அமைந்திருக்கும் ஆனால் அங்கு உயிரியல் வாழ்வு சுகமாக அமையும்.

சந்திர மண்ணை பொருத்தவரை வெப்ப வறட்சியாலும், கடும் குளிராலும் பாதிக்கப்படுவதால் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக அமையவில்லை.

சந்திர மண்ணில் மண் – நீர் இயல்பு இயக்க சுத்திகரிப்பு முறையும், மழை நீர் பொழிதலுக்கு உரிய வாய்ப்பும், தேவையான அளவு கோள் ஈர்ப்பு விசையின் தன்மை நிகழ்வதற்குரிய சூழ்நிலைகளை உருவாக்குமே ஆனால் மண்ணின் உட்புறத்தில் உள்ள நுண்ணுயிர்கள் அம்மண்ணின் மேற்பரப்பிற்கு வந்து வாழ ஆரம்பித்துவிடும். அதாவது சந்திரனில் உள் – வெளி, வெளி – உள் தொடர்புகளில் பஞ்சபூதங்கள் இணைந்து இயங்கும் வாய்ப்புகள் உருவாகிற சூழலில் அம்மண்ணின் உட்பரப்பில் வாழ்கிற நுண்ணுயிர்கள் அம்மண்ணின் மேற்பரப்பிற்கு வாழ வந்து விடும் என்பதை அறியலாம்.

இதனால் சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரம் பிரபஞ்ச இயற்கை கட்டமைப்போடு அமைந்திருப்பதை அறிய இயலும்.

வாழ்வியல் ஆதாரம்
மண்ணின் மகத்துவம் மண்ணில் வாழும் உயிர்ளுக்கு ஆதாரம்.

ஆதாரத்தை அறிவோம். ஆனந்தமாக வாழ்வோம்.

மேலும் அறிவோம் வாருங்கள்,

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of