அனைவருக்கும் வணக்கம்,
சந்திரனில் இயற்கை கட்டமைப்பு:
சந்திரனில் வாழ இயற்கை கட்டமைப்புகளை சீரமைத்தல் என்பது அவசியமாகும். சந்திரனில் இயற்கை கட்டமைப்புகளை சீரமைக்க இயலாது போனால்
தாவரங்களின் வாழ்வாதாரம்,
உயிரினங்களின் வாழ்வாதாரம்,
மனிதர்களின் வாழ்வாதாரம் என்பது இயலாத விசயம் என்பதை நாம் நன்கு அறியவேண்டும்.
நாம் இவ்வாறு கூறுவதற்கு அடிப்படையான காரணம் என்னவென்றால் சந்திரனின் இயக்கங்கள் பூமியின் இயக்கங்களை போல் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
அதாவது, சந்திரனில்:
- கோள் ஈர்ப்பு விசை குறைவு.
- வெப்பம் – குளிர் பூமியில் உள்ளது போல் பல மடங்கு அதிகம்.
- இரவு – பகல் தோராயமாக 28 நாட்கள்.
- சந்திரனின் சுழற்சி சுற்று காலம் 28 நாட்கள்.
- சுவாச இயல் காற்று குறைவு.
- மின் காந்த அலைகளின் தாக்கத்தால் மண் பாதிப்பு.
- விண் கற்களால் பாதிப்பு ………..
என்பன போன்ற பல்வேறு நிகழ்வுகள் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்பதை அறிந்திருந்தும், இவற்றை எல்லாம் சீரமைக்காமல் சந்திரனில் தாவரங்கள் வளர்த்தல், உயிரினங்கள் வளர்த்தல், மனிதர்களை வாழ வைத்தல் என்பது எவ்வாறு சாத்தியம் ஆகும்.
சந்திரனில் இயற்கை கட்டமைப்புகளை சீரமைக்கிற போது சூரியன் – சந்திரன் – பூமி இம்மூன்று கோள்கலும் சந்திக்கிற வேளை தான் சந்திரனிலும், பூமியிலும் பல்வேறு மாற்றங்கள் உருவாவதற்கு காரணமாக அமைய இருக்கிறது.
அதாவது சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான இயற்கை கட்டமைப்பு பனிகள் முழுமை அடைவதற்கும், பூமியில் சுகமான வாழ்வியல் மாற்றங்கள் உருவாவதற்கும் அடித்தலம் உருவாக்கப்படுகிறது.
எனவே சந்திரனில் வாழ்வாதாரம் உருவாக்கப்படுவதற்கு உரிய கடிகாரம் (சந்திரன் கால கடிகாரம்) உருவாக்கப்பட்டிருக்கிறது.
சந்திரனில் உருவாகும் இந்த மாற்றங்களால் பூமியிலும் கடிகாரம் (பூமி கால கடிகாரம்) உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவோம்.
சந்திரன் – பூமி இரண்டிலும் ஒரே சமயத்தில் நேரத்தை பார்க்கும் விதமாக கடிகாரத்தை உருவாக்கி இருக்கிறோம்.
மேலும் தெளிவாக விபரங்களை அறிவோம், வாருங்கள்.
நன்றி, வணக்கம்.