அனைவருக்கும் வணக்கம்,
இயற்கை என்பது பிரபஞ்சம் இயல்பாக இயங்கும் முறைகளை இயல்பாக விவரிக்கும் முறைகளாகும்.
பிரபஞ்சம் என்பது பஞ்ச பூதங்கள் (ஆகாயம், வெப்பம், காற்று, மண், நீர்) மனிதர்கள்,உயிரினங்கள், தாவரங்கள் உள்ளடங்கிய மாபெரும் கோள அமைப்பு முறையாகும்.
மாபெரும் கோள அமைப்பு முறைக்குள் ஏராளமான பெரு சிறு கோள்கள் (சூரிய குடும்பம், நட்சத்திர குடும்பங்கள்) கூட்டமைப்புகளாக அமைந்திருக்கிறது. இக்கூட்டமைப்பு முறைகள் இயல்பாக இணைந்து இயங்கும் முறைகளை விவரிக்கும் முறைகளை இயற்கை அறிவியல் என்கிறோம்.
இயற்கை அறிவியல் என்பது “இயற்கையில் இயற்கை இயல்பாக இயங்கும் விதங்களை இயல்பாக விவரிக்கும் முறைகளாகும்”. உதாரணமாக கூற வேண்டும் என்றால்:
- பூமியில் தாவரங்கள், உயிரினங்கள், வாழ்கின்ற முறைகள்,
- பூமிக்கு துணை கோளாக விளங்கும் சந்திரனில் இயற்கை கட்டமைப்பு முறைகள் ……….
- மனிதர்களோடு உயிரினங்கள் இணைந்து வாழும் முறைகள்,
- இயற்கையில் தாவரங்களின் பரிணாம வளர்ச்சி முறைகள்……..
- மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழும் இயல்பு முறைகள் என கூறிக்கொண்டே போகலாம்.
இயற்கை அறிவியல் முறையில்:
- “கோள்கள் இயங்கும் முறைகளையும், கோள்களை இயக்கும் முறைகளையும்” விவரிக்கலாம்.
- “ஒரு கோளில் உள்ள ஈர்ப்பு விசையைப்போல் இன்னொரு கோளில் ஈர்ப்பு விசையை உருவாக்கும் முறைகளை விவரிக்கலாம்”.
- “கோளில் இயற்கை மழையை பொழிய வைக்கும் முறைகளை விவரிக்கலாம்”.
- “மண்ணின் மூலக்கூறுகள், நீரின் மூலக்கூறுகள் உடைந்து போனால் அவற்றை எவ்வாறு இயல்பு நிலைக்கு கொண்டு வருவது” போன்ற விஷயங்களை விவரிக்கலாம். ……..
இயற்கை அறிவியல் முறைகளை இயற்கை அறிவியல் விதிகள் வாயிலாக சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான இயற்கை கட்டமைப்பு முறைகளை நிறைவாக உருவாக்குவது போன்ற நிகழ்வுகளை விவரிக்கலாம்.
மேலும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளிலும் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்க இயலும் என்பதை அறிவோம்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply