கோள் காந்த (மைய அச்சு ) ஈர்ப்பு விசை

அணைவருக்கும் வணக்கம்,

“கோள் காந்த (மைய அச்சு ) ஈர்ப்பு விசை”

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளின் சுழற்சி இயலுக்கு ஆதாரமாய் அமைந்திருப்பது கோளின் மைய (காந்த) அச்சாகும்.

பிரபஞ்ச சுழற்சி இயல் எனும் மிக பிரமாண்டமான அமைப்பில் “ஒவ்வொரு கோளின் சுழற்சி இயல் என்பது ஒவ்வொறு கோளுக்கும் தனித்துவம் வாய்ந்த அமைப்பாக அமைந்திருக்கிறது. “. ஒவ்வொரு கோளின் சுழற்சி இயலும், தனித்தனி வேக அளவிலும், தனித்தனி தன்மை அளவிலும், தனித்தனி கால அளவிலும், தனித்தனி இயற்கை சூழ்நிலைகள் …… போன்ற பல்வேறு அமைப்புகளில் மாறுபட்டிருக்கும்.

கோள் சுழற்சி இயல் என்பது பல்வேறு இணைப்புகளோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

  • கோள் சுழற்சி,
  • கோளுக்குள் சுழற்சி,
  • கோள் பாதுகாப்பு சுழற்சி (பாதுகாப்பு வளையம்),
  • தமது குடும்ப சுற்று வட்ட பாதை சுழற்சி,
  • பிரபஞ்ச இணைப்பு சுழற்சி

என்பன போன்ற பல்வேறு சுழற்சி இயல் பிரிவுகளுடன் உள்ளடக்கி இயக்க அமைப்புகள் இயற்கையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கோள் மைய அச்சின் சுழற்சி இயல் தொடர்பை அறிவோம்.

“கோள் தன்னை தானே சுற்றி வருவதற்கும், தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதற்கும், கோளின் பாதுகாப்பு வளைய சுழற்சி இயலோடு இணைந்தும் இயங்கிட கோளின் மைய அச்சே காரணமாக அமைந்திருக்கிறது”.

பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோள் சுழற்சி இயக்கத்திற்கும் கோளின் மைய அச்சு மிக முக்கியமான காரண கருவியாக அமைந்திருக்கிறது. விஞ்ஞான ஆராய்ச்சியில் உச்ச கட்ட ஆய்வாக திகழ்வது கோளின் மைய அச்சின் இயக்கத்தை பற்றியது ஆகும்.

சந்திரனில் மட்டுமல்ல எந்த ஒரு கோளில் உயிரினங்கள் வாழ வேண்டிய அவசிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்றாலும் அந்த கோளின் மைய அச்சின் இயக்கத்தை அறிய வேண்டும். அறிவோம், அறிந்து கொள்வோம்.

நன்றி, வணக்கம்.