Moon Common Clock

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரனில் உயிரிகள் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு சந்திரனின் இயற்கை கட்டமைப்பை சீரமைக்க வேண்டும்.

சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான ஆய்வுகளை ஒவ்வொரு நாட்டு விஞ்ஞானிகளும் மேற்கொள்கின்றனர். சந்திரனின் சுழற்சி கால அளவுகளை விஞ்ஞானிகள் அறிந்தனர். அதாவது சந்திரன் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதற்கும், தனது சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருவதற்கும் தோராயமாக 28 நாட்கள் ஆகிறது என குறிப்பிடுகின்றனர். இருப்பினும் சந்திரனில் பகல் – இரவு கால அளவுகள் என்பதும், ஒரு நாள் எத்தனை மணி நேரம் என்பதும் இதுவரை நாம் அறியவில்லை அதற்காக நாம் எந்த ஒரு கடிகாரமும் உருவாக்கப்படவில்லை. அதற்கு காரணம் சந்திரனில் உருவாகிற ஆய்வுகள் என்பது மிக மிகக் குறைந்த அளவில் எப்போதாவது ஒருமுறைதான் நிகழ்கிறது. மேலும் சந்திரனில் கூடுதலான வெப்பம், கடும் குளிர், நீர் நிலை அறியாது இருப்பது, சுவாசக்காற்று பற்றாக்குறை, விண்கற்கள் விழும் அபாயம் எனும் பல்வேறு நிகழ்வுகள் சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு தடையாக இருக்கிறது.

விஞ்ஞானிகள் சந்திரனில் ஆய்வுகள் மேற்கொள்வது, விண்வெளி பயணம் மேற்கொள்வது, சாட்டிலைட் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பூமி கடிகார கால அளவுகளை பயன்படுத்துகின்றனர் என்பதை நாம் அறிவோம். நமது ஆய்வியல் வாயிலாக (our moon life) சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்கிட சந்திரனின் இயற்கை கட்டமைப்பை சீரமைக்கின்றோம். இயற்கை கட்டமைப்பில் வெப்பம் – நீர் – மண் சுத்திகரிப்பு சுழற்சி முறைகளை உருவாக்குகிறோம். மேலும் கோள் ஈர்ப்பு விசையை உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய முறையில் மாறுகிற சூழ்நிலைகளை உருவாக்குகின்றோம். இதனால் சந்திரனின் சுழற்சி இயல் 28 நாட்களிலிருந்து 28 மணி நேரமாக மாறுகிறது. இதன் விளைவாக பகல் – இரவு உருவாகிறது. இதிலிருந்து பகல் 14 மணி நேரமாகவும், இரவு 14 மணி நேரமாகவும் உருவாகிறது. இந்த சூழலில்தான் சந்திரனின் பொது கடிகாரம் உருவாக்கப்படுகிறது.

சந்திரன் கடிகார படம்

கடிகார கால அட்டவணை

சந்திரனுக்காக உருவாக்கப்படும் கடிகாரம் சந்திரனில் வாழ்வாதார அனைத்து விஷயங்களுக்கும் பயன்படும். பூமியிலிருந்து சந்திரனுக்கு வருவதற்கும், சந்திரனில் இருந்து பூமிக்கு வருவதற்கு உரிய கால அளவுகளை தெரிந்துகொள்ள பயன்படுகிறது. சந்திரனில் நடக்கும் நிகழ்வுகளை பூமியில் உள்ளவர்கள் தெரிந்துகொள்வதற்கு பயன்படுகிறது. அதுபோல் பூமியில் நடக்கும் நிகழ்வுகளின் நேரத்தை சந்திரனில் தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக சந்திரனிலிருந்து அதை சுற்றி உள்ள விண்வெளி ஆய்வுகளையும், கோள்களின் ஆய்வுகளையும் அறிந்து கொள்வதற்கு உதவுகிறது.

விஞ்ஞான உலகிற்கு பூமியை கடந்து முதன்முதலில் சந்திரனுடைய கடிகாரம் உருவாவது பூமியின் பல்வேறு அவசிய காரண, காரியங்களுக்கு உதவும் என்பதை அறிய வேண்டும்.

மேலும் அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of