விஞ்ஞானத்தின் பார்வை

அனைவருக்கும் வணக்கம்.

விஞ்ஞானத்தின் பார்வை என்பது விஞ்ஞானியாகும் மனிதனை குறிப்பதாகும். நாம் வாழும் இந்த பிரபஞ்சம் மனிதர்கள் வாழத்துவங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை பல ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளை கண்டிருக்கிறது.

விஞ்ஞானம் எது, விஞ்ஞானி யார் என்பதை தெளிவாக, எளிமையாக புரிந்து கொள்ளும் முறையில் அறிவிக்கிறோம்.

அதாவது விஞ்ஞானத்தை யாரால் அறிய முடிகிறது, யாரால் விஞ்ஞானி ஆகமுடியும் என்பதை விளங்குவது விஞ்ஞானத்தின் பார்வை என்பதன் வாயிலாக தெரியப்படுத்துகிரேம்.

தெரிந்து கொள்ள வேண்டியதை அறிய:

  • தமக்கு தெரிந்த ஒரு கருத்தின் ஆழமான உட்பொருளை அறிய அல்லது,
  • தமக்கு தெரிந்த ஒரு பொருளின் தன்மையை தெளிவாக அறிய அல்லது,
  • தாம் அறிய விரும்பும் பொருளை அறிய வேண்டுமானால் –
    அதற்கு உரிய சூழ்நிலை
    + இயற்கை இயக்க சக்திகளின் அமைப்புகள்
    + தமது புலன் இயக்க சக்திகள்+ மன இயக்க சக்திகள்
    + உயிர் இயக்க சக்திகள்
    ஆகியவற்றோடு இணைந்து செயல்படுத்த முயற்சிக்கிறவர்களால் மாத்திரமே அறிய இயலும்.

விஞ்ஞானம் என்பது ஞானத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று ஆகும்.

ஞானத்தின் வெளிப்பாடு

ஆகிய ஐந்தில் ஐவகை செயல்களில்,
+ தெரிந்து கொண்டது
+ புரிந்து கொண்டது
+ தெளிவு பெற்றது (சிந்தனை)
+ அனுபவித்தது (செயல்)
+ பகிர்ந்து அளிப்பது (சிந்தனை, செயலை தொடர் இயலுக்கு கொண்டு செல்வது) என்பதில் தொடரும் ஐந்தில்;
* உருவாக்குவது
* பயன்படுத்துவது
* பரவலாக்கம் செய்வது

எனும் மூன்றில் உருவெடுக்கும் தெளிவின் விளைவுகள் “இயற்கை – செயற்கை” எனும் இரண்டில் “உயிரியல் வாழ்வியல்” எனும் நிகழ்வுகளுக்கு ஆதாரமாக தெளிபடுத்துவதுவே ஞானம் ஆகும்.

ஞான வெளியீடு
மனித வாழ்வியலின் அனுபவங்கள் மனித நேயத்தோடு இணைகிறபோது ‘உயிரியல் வாழ்வியல் எனும் மூலத்தோடு’ இணைகிறது. இணைப்புகளின் இயக்க தொடர்ச்சியே “ஞானமாய்” வெளிப்படுகிறது.

ஞானம் (ஞான இயல்)
ஞானம் என்பது மனிதன் அறிந்து வாழ வேண்டிய வாழ்வியல் முறைகள் முழுமையையும் வெளிப்படுத்துவது ஆகும்.

ஞானம் நான்கு பெரும் பிரிவுகளை உடையது. ஞானத்தின் முதல் பிரிவான விஞ்ஞான இயல் தொடர்பை சுருக்கமாக பார்ப்போம்.

விஞ்ஞான இயல் தொடர்புகள் மனித வாழ்வாதாரத்தில், மனித வாழ்வியலுக்கு தேவையான தேவைகளை:
+ மனிதர்கள் தங்களது தேவைகளை தங்களுக்குள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதிலும்
+ தாவரங்கள் வாயிலாக தாவரங்களுக்கும், தங்களுக்கும் உரிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதிலும்,
* உயிரினங்கள் வாயிலாக உயிரினங்களுக்கும், தங்களுக்கும் உரிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதிலும்

இயற்கை – செயற்கை சக்திகளின் தொடர்புகள் வாயிலாக:
+ மண்ணின் இயக்கங்கள் வாயிலாகவும்
+ நீரின் இயக்கங்கள் வாயிலாகவும்
+ காற்றின் இயக்கங்கள் வாயிலாகவும்
+ வெப்பத்தின் இயக்கங்கள் வாயிலாகவும்
+ ஆகாய இடைவெளிகள் வாயிலாகவும் அறிந்து வாழ முற்படுவதாகும்.

விஞ்ஞானத்தை அறியும் முறைகளை தொடர்ந்து அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of