உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
நட்பின் ஆதாரம் அன்பு. நட்பின் இருப்பிடம் மிக மிக மகத்துவம் வாய்ந்தது. நட்பிற்கு இலக்கணம் உண்டு என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இவ்வாறு குறிப்பிட காரணம்?
ஒரு மொழியை போலவே, நட்பின் இருப்பிடமும், அதன் தேவை அம்சமும் பரந்து விரிந்தது. ஆகவேதான் நட்பை, குடும்பம் அல்லது இல்லற வாழ்வியல் போல், ‘கட்டமைப்பு’ என்று குறிப்பிடப்படுவதில்லை. இதற்க்கு நட்பின் பரந்து விரிந்த தன்மையும், அதன் தேவையின் இருப்பிட அம்சமுமே காரணமாக அமைந்திருக்கிறது. இவ்வுலகில் வாழ்வியல் வாழ்வாதாரத்தை, அறிந்து செயல் பட்டிட மற்றும் செயல் தொடங்கிட நட்பின் ஆதாரம் இன்றியமையாதது. இம்மகத்துவத்தை அறிந்தால், நட்பின் மகத்துவத்தை பாதுகாக்கும் மார்கம் வெளிப்பட துவங்கும். முயற்சியே உலகின் அத்துனை சுப வெளிப்பாட்டிற்கும் ஆதாரமாக விளங்குகிறது. வாருங்கள் இந்த உலக நட்பின் சுப நாள் அன்று நட்பின் மகத்துவம் அறிந்து முயற்சிகளை மேற்கொள்வோம், ஆனந்தமாக வாழ்வோம் வாருங்கள்.
நன்றி வணக்கம்
“ஆதி மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை இன்றியமையாததாக, ‘நட்பு’ என்று குறிப்பிடப்படும் உறவு அமைப்பு: எல்லா மனித சமுதாய உறவுகளின் மூல சக்தியாகும். இதற்க்கு அறிவின் பரிணாம வளர்ச்சியின் தேவை ஆதாரமாக அமைகிறது”.
Leave a Reply