அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பகலும் – இரவுமாக, வெளிச்சமும் – இருளுமாக, வெப்பமும் – குளிருமாக நிறைந்து இருக்கிறது.
ஒரு கோளில் முன் பக்க சுற்று வட்டத்தில் வெளிச்சம் நிறைகிற அதே வேளையில் பின் பக்க சுற்று வட்டத்தில் இருள்(வெளிச்சம் இல்லாதிருக்கிறது) நிறைகிறது. கோளின் சுழற்சி முறையில் பகலும் – இரவுமாக சுழல்கிறது.
சூரிய குடும்பத்தில் சூரியனிடமிருந்து வெளிப்படுகிற வெப்பமும், வெளிச்சமுமாக படருவதை பகல் (முன் பக்கம்) என்றும், அதே வேளையில் வெப்பமும் – வெளிச்சமும் படருகிற நிகழ்வில் வெளிச்சம் விலகி வெப்பம் மாத்திரம் படர்வதால் இரவு (பின் பக்கம்) அல்லது இருள் என்று கருதப்படுகிறது.
நாள் = (வெப்பம் + வெளிச்சம் = பகல்) + (வெப்பம் – வெளிச்சம் = இரவு).
சூரியனிடமிருந்து வெளிபடுகிற வெப்பமானது மண் மீது படருவதை வெப்ப அலைகள் என்கிறோம்.
சூரியனிடமிருந்து வெளிபடுகிற வெப்பமானது ஆகாயத்தின் வாயிலாக காற்றின் துணையோடு மண்ணை தொடுவதை வெப்ப ஈர்ப்பு விசை என்கிறோம்.
வெப்பம் + ஆகாயம் + காற்று + மண் + ( – ஈரப்பதம் குறைவு)
ஆகிய ஐந்தின் கூட்டமைப்பு செயலை (ஈர்ப்பு விசையால் இயங்கும் செயல்) வெப்ப அலைகள் என்கிறோம்.
வெப்பம் மிக, மிக கூடுதலாகவும், ஈரப்பதம் (குளிர்) மிக, மிக குறைவாகவும் வெளிப்படுகிற வெப்ப அலைகளின் வெளிப்பாடுகளை மின் காந்த அலைகள் என்கிறோம்.
மின் காந்த அலைகளின் வெப்ப ஈர்ப்பு விசையால் மண் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மண்ணில் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் வாழ்வது இயலாது என்பதை அறிய வேண்டும்.
மின் காந்த அலைகளின் (வெப்ப ஈர்ப்பு விசை) இயக்கங்களை அறியாமல் மண்ணில் வாழ்வது கடினம். சில வேளைகளில் வாழ்வது இயலாது என்பதை அறிய வேண்டும்.
மின் காந்த அலைகளின் இயக்கங்களை அதாவது மண்ணில் படரும் வெப்ப தாக்கத்தை அறிந்தால் அதை சீரமைப்பது எவ்வாறு என்பதை அறியலாம். அல்லது அவ்விடத்தை விட்டு வேறு இடம் சென்று வாழ்வாதாரத்தை உருவாக்க முயற்சி செய்யலாம்.
மின் காந்த அலைகளின் பாதிப்பு:
- மின் காந்த அலைகளின் தாக்கத்தால் மண்ணின் மூலக்கூறுகள் பாதிக்கப்படுகிறது.
- மின் காந்த அலைகளின் தாக்கத்தால் நீர் ஆவியாகுதலின் பணி(செயல்) வேகமாக நடைபெறும்.
- பனி மலைகள் நீர் நிலைகளாக மாறுதல் பணி(செயல்) வேகமாக நடைபெறும்.
- மின் காந்த அலைகளின் தாக்கத்தால் பயன்படுத்யப்படாத நீரின் மூலக்கூறுகள் பாதிக்கப்படுகிறது.
- மண்ணிற்குள் உள்ள நீர் மற்றும் திரவ நிலைகள் வெகு சீக்கிரத்தில் ஆவியாகுதல் நிலையை அடைந்துவிடும்.
- மண்ணிற்குள் உள்ள கனிம வளங்களின் பரிணாம வளர்ச்சி பாதிப்புடையும்.
- தாவரங்கள், உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும்.
சீரமைப்பு: மின் காந்த அலைகளால் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை சீரமைக்கப்பட
- பாதிக்கப்பட்ட மண் அமைப்பை சுத்திகரிப்பு சுழற்சி முறையில் சீரமைக்கப்பட வேண்டும்.
- நீர் ஆதாரங்கள் சுத்திகரிப்பு பயன்படுத்தப்பட வேண்டும்.
- மழை பொழிதல் நிகழ வேண்டும்.
- தாவரங்கள் வளர்ச்சி நிலை தொடர்ச்சியாகுதல் நிகழ வேண்டும்.
- உயிரினங்களின் வாழ்வாதாரம் பரிணாம வளர்ச்சியில் மேன்மை அடைய வேண்டும்.
மனிதர்களின் வாழ்வாதாரம் விஞ்ஞான வாழ்வாதார முறைகளோடு இணைய வேண்டும்………
அறிய வேண்டியவை:
“நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறு எங்கும் மின் காந்த அலைகளால் பாதிக்கப்பட்ட மண், நீர் சீரமைக்கப்படவில்லை என்பதை நாம் நன்கு அறியவேண்டும்”.
“மின் காந்த அலைகளின் இயற்கை பங்கீடு என்பது இப்பிரபஞ்சத்தின் மூல இயக்கங்களை சார்ந்தது என்பதை அறிய வேண்டும் “.
“மனிதர்கள் தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்கிட முயற்ச்சிக்கிற போது பஞ்ச பூதங்களின் ( ஆகாயம், வெப்பம், காற்று, மண், நீர் ) இணைப்பு செயல்களை அறிகிற அதே வேளையில் அப்பகுதியில் நிலவும் மின் காந்த அலைகளின் தாக்கத்தை அறிவது அவசியம் என்பதை அறிய வேண்டும்”.
அறிய வேண்டியதை அறிவோம்.
அறிந்ததில் சீரமைக்கப்பட வேண்டியதை சீரமைப்போம்.
சிறப்புடன் வாழ்வோம்.
நன்றி, வணக்கம்.
அனைவருக்கும் வணக்கம்,
நீரின் இருப்பிடம் மண்ணிற்குள் மிக குறைந்த அளவில் அமைந்திருக்கும் வேளையில் வெப்பகாற்றும், வெப்ப ஒளிகளும் மண்ணின் மேற்பரப்பில் மற்றும் மண்ணின் இடைவெளிகளில் ஊடுருவி வெளிப்படும் வெப்பமானதை மின்காந்த அலைகள் என்கிறோம். இவ்வாறு வெளிப்படும் வெப்பத்தில் ஒரு கோளிற்கு நீரின் இருப்பிடம் இல்லை என்று கூறிவிட்டாள். அக்கோளானது வெப்பத்தில் எரிந்து சிதறி விடும். இப்பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களால் ஆனது என்பதை அறிய வேண்டும். இப்பிரபஞ்சத்தில் அமைந்திருக்கும் கோல் அமைப்பு ஒவ்வொன்றும் பஞ்சபூதங்களால் ஆனது. பஞ்சபூதங்களின் கூட்டமைப்பின் துணைகொண்டுதான் வாழ்வியலை எளிமையாக உருவாக்கிட இயலும் என்பதை அறிய வேண்டும்
நன்றி வணக்கம்.