இயற்கை இயல்: அறிவு I & II

 “இயற்கையின் இயல்பில் வாழ்ந்து பழகுகிறோம், வாழ்ந்து பழகுவோம் “

அறிவின் I (முதல்) பருவம்: இயற்கையில் வாழ்ந்து (பூமியில்) பழகுகிறோம்.

அறிவின் II (இரண்டாம்) பருவம்: இயற்கையை இயக்கி வாழ்ந்து (சந்திரனில்) பழகுவோம்.

பூமி: பூமியில் நாம் இயற்கையில் வாழ்ந்து பழகுகிறோம் என்பதன் பொருளை (கருத்தை) விரிவாக அலசி ஆராய்ந்து பார்த்தால் கற்றலைப்பற்றி சில விபரங்களை புரிந்து கொள்ள இயலும்.

மனித வாழ்வாதாரத்தின் துவக்க காலத்தை ஆராய்ந்து பார்த்தால்;

 • இயற்கையை ( பொதுவாக) பார்த்தோம்.
 • இயற்கையில் தாவரங்களின் அசைவுகளை, அசைவுகளில் வளர்ச்சியை பார்த்தோம்.
 • இயற்கையில் உயிரினங்களின் அசைவுகளை, நடத்தலை, ஓடுதலை பார்த்தோம்.
 • இயற்கையில் உயிரினங்கள் ஓய்வெடுத்தலை பார்த்தோம், உறங்குதலை பார்த்தோம். பரிணாம வளர்ச்சியினை பார்த்தோம்.
 • மனிதர்களும் தங்களது வாழ்வியலை இயற்கையின் துணையோடும், தாவரங்கள், உயிரினங்களின் வாழ்வாதார இயலோடு இணைந்தும் உருவானது, உருவாக்கப்பட்டது. இயற்கை இயலோடு இணைந்து செயற்கை இயல் மனித அனுபவ அறிவால் உருவானது, உருவாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
  இயற்கை (பஞ்ச பூதங்கள்) + இயற்கையின் சங்கம கலவைகள் + தாவரங்கள் + உயிரினங்கள் + மனிதர்களின் வாழ்வியல் அனுபவ கலவைகளின் தேர்ச்சி + தேவைகள் (அவசியம் + தொடர்புகள்) = செயற்கை உருவாக்கம்.
  இயற்கை + இயற்கையில் செயற்கை = அறிவு.
  இவ்வாறு இயற்கையில் இணைந்து வாழும் வாழ்வியல் அனுபவங்களில், தொடர்ச்சியான அனுபவங்களின் தொடர்ச்சியே பூமியில் மனிதர்களின் வாழ்வாதார அறிவாகும். இவ்வறிவையே அறிவின் I (முதல்) பருவம் என்கிறோம்.

இவ்வறிவை

 • பூமியின் அறிவு (வாழ்வியலுக்கு).
 • மனித முதல் அறிவு.
 • மனித முதல் வாழ்வாதார அறிவு.
 • மனிதனின் முதல் பகுத்தறிவு.
 • பிற கோள்களுக்கு செல்ல வழி காட்டும் அறிவு.
 • உயிரியல் வாழ்வின் துவக்க மேலான முதல் அறிவு.
 • இயற்கை இயல் முதல் அறிவு எனவும் வழங்கலாம்.

சந்திரன்: மனிதர்களாகிய நாம் பூமியில் (பூமி எனும் உலகில்) பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தது போதும் என்று எண்ணியா! வேறு உலகம் சென்று வாழ முயற்சி செய்கிறோம். சற்று யோசித்துப் பார்த்தால் புரியவரும்.

மனிதனது துவக்க காலத்தில் இரவு நேரத்தில் எங்கு செல்வது, எதன் துணைகொண்டு (வெளிச்சம்) செல்வது என யோசித்துக் கொண்டே அண்ணாந்து பார்த்த போது தான் ஓர் உண்மை புரிந்தது. அதாவது பகலில் வெளிச்சம் தர வட்ட வடிவில் பந்து (சூரியன்) போன்ற ஒன்று இருப்பது போல் இரவிலும் ஒன்று (சந்திரன்) இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இதில் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

இம்மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை. ஏன் என்றால் இரவில் வெளிச்சத்தில் மாற்றங்கள் (வளர் பிறை – தேய் பிறை) உருவாவதைக்கண்டு வருத்தம் தோன்றியது. அதற்கு காரணம் இரவில் வெளிச்சம் தமக்கு சரியான முறையில் கிடைக்க வில்லையே என்று வருத்தம் அடைய வேண்டியிருந்தது.

தனக்கு மகிழ்ச்சி தந்த ஒன்றை காண நினைக்க வைத்த நிகழ்வும், தனக்கு வருத்தம் தந்த ஒன்றை காண நினைக்க வைத்த நிகழ்வும் ஒன்று என்றால் அது சந்திரனாகத்தான் இருக்க இயலும் என்பதை அறிவோமா!

“வாழ்வியல் வாழ கற்றுத்தந்த அனுபவ பாடங்கள் (நிகழ்வுகள்) எத்தனை, எத்தனையோ அதில் இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது ” என்பதை அறிந்தால் சந்திரனில் வாழ நினைவு தோன்றியது ஏன் என்பது புரியவரும்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதுதான் பகலிலும் சந்திரன் இருக்கிறது வெளிச்சத்தில் (சூரிய வெளிச்சத்தில்), இரவிலும் தாமே வெளிச்சமாய் இருக்கிறது. எனவே அங்கு (சந்திரனில்) சென்று வாழ்ந்தால் இரவில் வெளிச்சத்திற்கு என்று எதையும் நாடவோ, தேடவோ தேவை இல்லை என்றுஇருந்தது.

“இரவில் தடுமாற்றம், இருளில் எதுவும் தெரியவில்லை”. இரவு கற்றுத்தந்த பாடம் “ஓய்வு”, “வெளிச்சத்தை உருவாக்குவது” “இரவில் வாழ்வாதாரத்தை உருவாக்குவது”, ஆனால் பின்னாளில் புரியவந்தது. இரவு – பகல் நிகழ்வுகள் இயற்கையில் நிகழ்கிறது. அது சந்திரனிலும் நிகழ்கிறது என்பதை அறிய முடிந்தது. சந்திரனை கண்டது, சந்திரனில் வாழலாம் என நினைத்தது மனிதனின் துவக்க காலத்தில் இருந்தே உருவான விசயமாகும். இந்த எண்ணமே மனிதனது விஞ்ஞான அறிவில் ஆகாயத்தில் பறந்திட, ஆகாய விமானங்களை உருவாக்கிட மூலமாக இருந்தது என்பதை அறிய வேண்டும்.

இந்த அறிவின் துணை கொண்டே சந்திரன் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள வைத்தது என்பதை அறிவோமா!.

சந்திரனில் வாழ்வதற்கு நாம் அறிவின் II (இரண்டாம்) பருவத்தை அறிய வேண்டும் என்பதன் நோக்கமே பூமியின் இயற்கை அமைப்பிற்கும், சந்திரனின் இயற்கை அமைப்பிற்கும் உள்ள வித்தியாசமே காரணமாக அமைந்திருக்கிறது என்பதை அறியவேண்டும்.

சந்திரனை பொருத்தவரை அங்குள்ள இயற்கை (பஞ்ச பூத இயற்கை இணைப்பு அமைப்பு) அமைப்பை சீரமைத்தால் தான் இயற்கை இயல், உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்க இயலும் என்பதை அறியவேண்டும்.

இயற்கையில் (பஞ்ச பூதங்களில் ஒருங்கிணைப்பு) சீரமைப்பு + கோள் சுழற்சி இயல் சீரமைப்பு + தாவரங்கள், உயிரினங்களின் வாழ்வாதார கட்டமைப்பு + மனிதர்களின் வாழ்வியல் அமைப்பில் அனுபவங்களை உருவாக்குதல் = சந்திரனில் வாழ்வாதாரம்.

“சந்திரனில் இயற்கை கட்டமைப்பு முறைகளை நிறைவாக உருவாக்கினால்” தான் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான இயற்கை கட்டமைப்புகளை உருவாக்க இயலும் என்பதைத்தெளிவாக அறிய வேண்டும்.

“வாருங்கள் ஒருங்கிணைவோம், இயற்கை கட்டமைப்பை உருவாக்குவோம், இயற்கை வாழ்வியலில் தாவர, உயிரின, மனிதர்களின் வாழ்வியல் கட்டமைப்பை (சங்கமத்தை) உருவாக்குவோம்”.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of