அறிவியல் வளர்ச்சி கட்டுரைகள்

அனைவருக்கும் வணக்கம்,

மனிதன் இந்த உலகத்தில் வாழ வேண்டுமென்றால் அறிவியல் சார்ந்த பார்வைகள் தெளிவுகள் ஆக்கபூர்வமான விஷயங்கள் என ஒவ்வொன்றும் தெளிவாக இருக்க வேண்டும். அறிவியல் வளர்ச்சியை பற்றிய கருத்துக்கள் தெளிவாக இருக்கையில் தான் மனித வளர்ச்சி என்பது அல்லது மனித வாழ்வியல் என்பது நிறைவுபெறும். அதாவது மனிதர்களது தேவைகள் பூர்த்தி செய்து கொள்வதற்கு உரிய வாய்ப்புகள் உருவாகும். அறிவியல் வளர்ச்சியை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நம் உடல், மனம், உயிர் என மனித உயிர் உடல் கட்டமைப்பு என்பது உலகத்தோடு எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை அறியவேண்டும். இதை மேலும் விரிவாக விளக்க வேண்டுமென்றால் நமது உடல், புலன்கள், மனம், சித்தம், அன்பு ……. மனித வாழ்வியல் கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் பிற மனிதர்களோடு எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதையும், எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது என்பதையும் அறிய வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனித வாழ்வியலுக்கு உயிரினங்கள் எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதும், தாவரங்கள் எவ்வாறு மனித வாழ்வியலோடு இணைக்கப்பட்டிருக்கிறது அல்லது இணைந்திருக்கிறது என்றும், பஞ்சபூத அமைப்புகள் பிரபஞ்சமாய் இணைந்திருக்கின்ற தொடர்புகள் மனிதர்களோடு இணைந்திருக்கும் முறைகளோடு என ஒவ்வொன்றையும் அறிவதால் தான் அறிவியல் சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். அறிவியல் சார்ந்த விஷயங்களை அறிவதற்கும், விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் உதவுகிறது. இவற்றை அறிய வேண்டும் என்பது தனி மனிதர்களை குறிப்பிடக்கூடிய கருத்து அல்ல, மனித சமுதாயம் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு, அவ்வாறு வாழ்கின்ற வாழ்வியல் முறைகளில் மனிதனுக்குத் தேவையான விஷயங்களை பிரபஞ்சத்திலிருந்து எவ்வாறு பெறுவது, உற்பத்தி செய்து கொள்வது, அதை பரிணாம, பரிமாற்ற வளர்ச்சிகளுக்கு இவ்வாறு உட்படுத்துவது என்பதை எல்லாம் அறிய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆகவே தான் நாம் இங்கு அறிவியல் வளர்ச்சியை பற்றி இங்கே நன்கு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே தான் இது சார்ந்த விஷயங்களை நாம் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நமது புரிந்து கொள்ளுதல் ஒவ்வொரு விஷயங்களும் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இவற்றை அறிவதால் தான் மனிதனின் சிறப்பம்சம் என்று சொல்லக்கூடிய பகுத்தறிவின் வெளிப்பாடு நமக்கு தோன்ற ஆரம்பிக்கும். அப்பொழுதுதான் நமது பழக்க வழக்க வாழ்வியலை அறிவுடன் சார்ந்த வாழ்வியலாக அதாவது அறிவுடன் இணைந்த பழக்க வழக்கங்களையும் உருவாக்கிக் கொள்ளக் கூடிய முறைகள் உருவாகும். ஆகவே அறிந்து கொள்ள வேண்டியதை அறிந்து கொண்டால் மனித வாழ்வு மேன்மை ஏற்படும். சிறப்பு அம்சங்கள் கொண்டதாக அமையும். மனிதன் மனித வாழ்வியலுக்கு மாத்திரமே வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ளாமல் தன்னோடு இணைந்து வாழக்கூடிய உயிரினங்கள் எவ்வாறு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கிறது, அவற்றின் தேவைகளை நம்மால் எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வது என்பதும், அதுபோலவே தாவரங்கள் அவற்றின் வளர்ச்சியும் வாழ்வாதார அமைப்போடு மனித சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிய வேண்டியது இருக்கிறது. தாவரங்கள் இல்லை என்றால் உயிரினங்கள், மனிதர்கள் இல்லை என்றாகிவிடும். வாழ்வாதார முயற்சிகளை அறிகின்ற பொழுது அறிவியல் வளர்ச்சி எவ்வாறு மனித குலத்திற்கு தேவைப்படுகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆகவே அறிய வேண்டியதை அறிந்து மனித சமுதாயம் ஆனந்தமாய் வாழ்வதற்கு உரிய வழிவகை உருவாகும்.

மேலும் தொடர்ந்த அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of