ஸ்ரீ சிவமதி மா.மதியழகன்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களின் கூட்டு அமைப்பு முறையாகும். பஞ்ச பூதங்கள் என்பது ஆகாயம், காற்று, வெப்பம், மண், நீர் ஆகும்.

பஞ்ச பூதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கும் முறைகளாகவும், ஒவ்வொன்றும் தனித்தனியாக இயங்கும் முறைகளாகவும் இயற்கையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

பஞ்ச பூதங்கள் இயங்கும் முறைகளை பொறுத்து தான் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்களின் வாழ்வாதாரம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை அறிந்தால் தான் இயற்கையின் கட்டமைப்பு முறைகளை புரிந்து கொள்ள இயலும் என்பதை அவசியம் அறிய வேண்டும்.

இந்த கட்டமைப்பு முறைகள் பூமியில் இருப்பது போல் சந்திரனில் மற்ற கோள்களில் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

மேலும் விரிவாக அறிவோம்.

சந்திரன்: பஞ்ச பூதங்களின் தொடர்பு அமைப்பு முறைகள் சந்திரனை பொருத்தவரை உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக அமையவில்லை.

எவ்வாறெனில் ஆகாயம், வெப்பம், காற்று, மண், நீர் என ஐந்தும் இருந்தாலும் அவை உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக அமையவில்லை.

அதாவது வெப்பமும், வெளிச்சமும் இணைந்து வெளிப்படும் பகல் பொழுதானது 14 தினங்களாகவும் (பூமியின் கால அளவில்), வெப்பமும், வெளிச்சமும் இணைந்து மிக மிக குறைந்த அளவில் வெளிபடுத்தும் இரவானது 14 தினங்களாகவும் சந்திரன் தமது சுழற்சியில் வெளிபடுத்துகிறது. எனவே சந்திரனில் வெப்பத்தின் அளவு என்பது உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய நிலையில் பஞ்ச பூத கலவையில் இணைந்திருக்கவில்லை.

அதுபோலவே காற்றின் இயக்கமும் வெப்பத்துடன் இணைந்து கடுமையான வறட்சி தன்மையை பகல் பொழுதில் 14 தினங்களாகவும், அது போலவே காற்றின் இயக்கம் குளிர் தன்மையுடன் இணைந்து கடும் குளிராக இரவு பொழுதில் 14 தினங்களாகவும் தமது சுழற்சியில் வெளிபடுத்துகிறது.

சந்திரனில் வெப்பத்தின் அளவு மாறுபட்ட இயக்கத்தில் இயங்குதலும், சந்திரனின் சுழற்சி வேகம், கோள் ஈர்ப்பு விசை ….. போன்ற இயக்கங்கள் உயிரியல் வாழ்வியலுக்கு ஏற்புடையதாக அமையவில்லை. சந்திரனில் பஞ்ச பூதங்களின் இயக்க தொடர்புகள் இயக்கங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறதே தவிர அதன் உட்கட்டமைப்பின் இயக்க தொடர்புகள் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக அமையவில்லை.

அதுபோலவே சந்திரனின் பாதுகாப்பு வளைய இயக்கமும் முறையான சுழற்சி வேகத்தில் இல்லாது இருப்பதால் விண்கற்கல் சந்திரனின் உட்கட்டமைப்பில் விழுகிறது.

எனவே இது போன்ற பல்வேறு நிகழ்வுகள் இயற்கையில் பாதுகாப்பு சாரம்சத்துடன அமையவில்லை. இயற்கையின் இயக்கங்களுக்கு ஏற்புடைய நிலையில், சந்திரனில் பஞ்ச பூத தொடர்புகள் இணைந்து, இயல்பாக அமையவில்லை. எனவே சந்திரனில் பஞ்ச பூத தொடர்புகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதை அறிய முடிகிறது. சந்திரனில் பஞ்ச பூத தொடர்புகள் அதன் உட்கட்டமைப்பில் உயிரினங்கள், தாவரங்கள் வாழ்வதற்கு ஏற்புடைய நிலையில் அமையாதிருக்கும் பட்சத்தில் பூமியில் உள்ள உயிரியல் வாழ்வாதாரத்திற்கு தேவையான ஒளியையும், குளிர்ச்சியையும் தந்து உதவுகிறது. இந்நிலையில் சந்திரனில் பஞ்ச பூதங்களின் தொடர்பு அமைப்புகள் ஓரளவிற்கு இணைந்து இயங்கும் தன்மை உடையதாக அமைந்திருக்கிறது.

நன்றி, வணக்கம்.

 

 

 

 

 

 

https://ourmoonlife.com/aaraychi/