” சந்திரன் (Moon) இலட்சியம் II “
எனது இலட்சியம் உயிர் (ஜீவன்).
உயிரைப்பற்றி உலகிற்கு அறிவிக்க வேண்டும்.
உயிர் மூன்று அமைப்புகளுல் உள்ளடங்கி இருக்கிறது.
I. ஜடமற்ற உயிர் (உயிரினம் – Living)
II. ஜட உயிர் (பிரபஞ்சம் – Non living)
III. மூல உயிர் (ஜடமற்றது – ஜடம் இவ்விரண்டின் மூலமானது).
முதலில்: ஜடமற்ற உயிரினங்களில் மிக மிக உயர்வானதாக கூறப்படுவது “மனிதர்கள்”. மனிதர்களுல் உயிரை காணும் முறைகளையும், உயிரோடு தொடர்பு கொள்ளும் முறைகளையும் அறிந்து அறிவிக்கிறோம்.
இரண்டாவது: அதாவது தற்போது பிரபஞ்ச தொடர்பில் நாம் வாழும் பூமிக்கு அருகில் அமைந்திருக்கும் சந்திரனில் மனிதர்கள் தமது வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டிய அவசிய காலமாக அமைந்திருக்கிறது. இயற்கையின் கட்டமைப்பு முறைகளை நன்கு கவனித்து பாருங்கள் ஒன்று புரிந்து கொள்ள முடியும். அதாவது நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்றாலும், அல்லது புதுப்பிக்கப்பட வேண்டும் என்றாலும் அதற்குரிய அணைத்து ஏற்பாடுகளும் அரங்கேற்றம் நடைபெறும்.
அதற்கு நீர், நிலம், வெப்பம், காற்று, தாவரங்கள், உயிரினங்கள்,மனிதர்கள், இயற்கை, செயற்கை என அனைத்திலும் உருவாகும் மாற்றங்களை அறியலாம். அவ்வாறு தான் சந்திரனில் மனிதர்களின் வாழ்வாதாரம் உருவாக்கப்படுவதற்கு எமது ஆய்வியல் முறைகளும் அவசியமாக்கப்படுகிறது.
ஆகவேதான் “சந்திரனில் உள்ள இயற்கை அமைப்பு (உள் கட்டமைப்பு, வெளி கட்டமைப்பு ) முறைகளையும், இயற்கை சுழற்சி இயல் முறைகளையும், சீரமைக்க வேண்டிய முறைகளையும்” எடுத்து உரைக்கின்றோம்.
சந்திரனில் வாழ்வாதாரத்தை இணைந்து உருவாக்குவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.