ஸ்ரீ சிவமதி மா. மதியழகன்
நிறுவனர் & தலைவர் - ஜீவயோகம்
Laws of Science
அணைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் இன்றைய நவீன வாழ்க்கை அமைப்பு முறைகளை கூர்ந்து கவனித்தால் :
- இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறைகள்,
- இயற்கை அமைப்பில் கழிவுகள் கலந்த நிலையில் வாழும் வாழ்க்கை முறைகள் (மிகவும் குறைவு),
- சீரமைத்து வாழும் வாழ்க்கை முறைகள்,
மண்ணின் மேற்பரப்பில் வாழுகின்ற வாழ்வியல் பயனத்தில்:
- நீரின் மேல் பயணம்,
- நீருக்குள் பயணம்,
- விண்ணில் பயணம்,
- பூமியில் முழுமையாக வாழும் பயணம்,
- பிற கோள்களில் வாழ முயற்சிக்கும் பயணம்,
போன்ற பயணங்கள் அணைத்திற்கும் விஞ்ஞான அமைப்பு முறைகளே மூலமாக அமைந்திருக்கிறது என்பதை அறிவோம். "விஞ்ஞான தீர்வுகள், விதிகள் என்று அழைக்கப்படுகிறது"
- விஞ்ஞான விதிகள் வெளிப்படுத்தும் மகத்துவம் வாயந்த உண்மைகள்,
- மறைந்து வெளிப்படுத்தும் உண்மைகள்
என இருவகைப்படும் என்பதை அறிவோமா!
விஞ்ஞான விதிகள் வெளிபடுத்தும் உண்மைகளை அணைவரும் அறிவோம்.
விஞ்ஞான விதிகள் மறைந்து வெளிபடுத்தும் உண்மைகளை அறிவோமா? அறிவோம் வாருங்கள், அறிவதால் விஞ்ஞானம் மேலும் மகத்துவம் வாய்ந்த செயல்களை செயல்படுத்த இயலும். இதனால் மனிதர்களின் வாழ்க்கைத்தரம் மேலும் பல மடங்கு உயர்ந்து விளங்கும். விஞ்ஞான விதிகளின் விதிகள் இரு வகைப்படும்.
- வாழ்வியல் விதிகள்,
- வாழ்வியல் நியதிகள்
இவ்விரு வாழ்வியல் அமைப்பு முறைகளையும் விஞ்ஞானிகளின் விஞ்ஞான விதிகள் வெளிபடுத்தும் வாழ்வியல் முறைகளை அறிவோம், அறிந்து கொள்வோம்.