பிரபஞ்ச ஆராய்ச்சியாளர்

ஸ்ரீ சிவமதி மா.மதியழகன்

ஆராய்ச்சியாளர், பிரபஞ்ச இயல் அறிவியல்

பிரபஞ்சம்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முறையும் பார்க்கிற பொழுது புதிதாகவே தோன்றும். எண்ணிலடங்கா இயற்கை கட்டமைப்புகளை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.
அதில்
தொடரும் வெளிச்சம்,
சுழன்று வரும் காற்று,
நீல நிறமாக தோன்றும் ஆகாயம்,
மிதந்து வரும் மேகங்கள்,
மழை பொழியும் ஜாலங்கள்,
இடி – மின்னலின் ஓசைகள்,
ஈர்ப்பு விசையில் சுழலும் கோள்கள்,
பகலில் தோன்றும் சூரியன்,
பௌர்ணமி தினத்தில் சந்திரன்,
அன்று பூத்த மலர்கள் போல் நட்சத்திர குவியல், ……….‌ என பரந்து விரிந்து நிற்கும் விசாலமான பிரபஞ்சத்தை நினைத்தாலே நெஞ்சில் மகிழ்ச்சி பொங்கும்.

ஆரவாரம் இல்லாமல் இரவில் பூமிக்கு ஒளி விளக்காய், வழி செல்ல வழி காட்டியாக திகழும் சந்திரனை பார்க்கிற பொழுது எல்லாம் எப்பொழுது உன் மடி மீது குடியிருப்போம் என வாழ்ந்த எனக்கு உம்மை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பளித்தாய்.
நன்றி சந்திரனே நன்றி.

சந்திரனில் உயிரியல் (மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்கள்) வாழ்வாதாரம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்கிற போது தான் பிரபஞ்சத்தை அறிந்து கொள்ள விரும்பும் நிலை தோன்றியது. ஏனெனில் பிரபஞ்சத்தின் இயக்கங்களை அறியாமல் சந்திரனின் ஆய்வுகளை தொடர இயலாது என்பது புரிந்து கொள்ள முடிந்தது.

ஆகவே பிரபஞ்ச இயக்கங்களோடு இணைந்து இயங்கும் சந்திரனின் இயக்கங்களை அறியலாம் வாருங்கள்.

அதுபோலவே சந்திரனின் இயக்கங்களோடு இணைந்து இயங்கும் இயற்கை கட்டமைப்புகளை அறிவோம் வாருங்கள்.

பூமியின் துணை கோளாய், வெள்ளிக்கும், செவ்வாய்க்கும் இடையில் சுழன்று வரும் சந்திரனை அறிகின்ற அதேசமயம் பிரபஞ்சத்தை பற்றியும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.