அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில்
மிகவும் அருமையான,
மிகவும் அற்புதமான,
மிகவும் வளமான,
மிகவும் நலமான,
மிகவும் ஆச்சரியமான,
மிகவும் ஆழமான,
மிகவும் புதிருமான,
மிகவும் புதியதுமான, சிக்கல் நிறைந்ததுமான, ……. புரிந்து கொள்ள கடினமானதுமான ஒரு நிகழ்வு என்றால் அதுதான் இயற்கை.
இயற்கை என்றால் இயல்பானது என்று சுருக்கமாக கூறி விரிவாக விளக்கலாம்.
இயற்கை என்றால் இயல்பாக உருவாவது,
இயற்கை என்றால் தாமாக வளர்வது,
இயற்கை என்றால் தாமாக அபிவிருத்தி ஆவது,
இயற்கை என்றால் தாமாக முடிவது,
இயற்கை என்றால் தாமாக மடிவது,
இயற்கை என்றால் மடிவது, அழிவது, வீணாய் போனது, மாசடைந்து போனது, கழிவுகளில் கலந்திருப்பது …….. என்பன போன்றவை மக்கி போவதும், பிற உயிரினங்களுக்கு உணவாக மாறுவதும், புதிய வடிவம் எடுப்பதும்……. போன்ற பல்வேறு நிகழ்வுகள் இயற்கையில் நிகழ்கிறது.
ஆக இயற்கை என்பது,
“பிரபஞ்சத்தில் ஜடமும், ஜடமற்றதும் இணைந்து இயங்கும் இயக்கத்தில்: இயங்குதலில் இயக்குதல் நிகழ்வைத்தான் இயற்கை என்றும், இயற்கை கட்டமைப்பு என்றும் அழைக்கிறோம். இயற்கையின் பாதுகாப்பு கவசமாக முக்கூட்டு கலவை சங்கமம் திகழ்கிறது.
முக்கூட்டு கலவைகளின் சங்கமம்: “நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில், பஞ்ச பூதங்கள் ஐந்தில் முக்கூட்டு (வெப்பம் + காற்று + நீர்) கலவைகளின் சங்கம அமைப்பையே இயற்கை என்றும் பிரபஞ்ச இயற்கை என்றும் அழைக்கிறோம்.
முக்கூட்டு கலவைகளின் சங்கமம் இந்த பிரபஞ்சத்தில் எங்கெல்லாம் அமைந்திருக்கிறதோ அங்கெல்லாம் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது என்பதை அறிவோமா? முக்கூட்டு கலவைகளின் சங்கம அமைப்பால் தான் பிரபஞ்சத்தில் உள்ள கோள்களும், நட்சத்திரங்களும் பாதுகாப்பான முறையில் இயங்குகிறது.
முக்கூட்டு கலவைகளின் சங்கமம் எந்த ஒரு கோளில் அமைந்திருந்தாலும் அங்கு மனிதர்கள், தாவரங்கள், மிகப்பெரும் உயிரினங்கள் வாழ்ந்தாலும், வாழாது இருந்தாலும் அங்கெல்லாம் ” நுண்ணுயிர்கள் ” வாழ்ந்து கொண்டு இருக்கும் என்பதை அவசியம் அறியவேண்டும்.
முக்கூட்டு கலவைகளின் சங்கம அமைப்பில் வாழும் முதல் உயிரினம் நுண்ணுயிர்கள் ஆகும். பிரபஞ்சம் முழுவதும் முக்கூட்டு கலவைகளின் சங்கம அமைப்பால் இயங்குகிறது என்றால், பிரபஞ்சம் முழுவதும் நுண்ணுயிர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
முக்கூட்டு கலவைகளின் பனிகள்:
- வெப்பம் சீராக குளிர்ச்சியும் (நீர்), குளிர் சீராக வெப்பமும் காற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
- நீர் ஆவியாகுதலின் பனியும், அதனால் மழை – பனி பொழியவும் காரணமாக அமைந்திருக்கிறது.
- மண்ணின் மேல் நீர் ஆதார அமைப்புகள் இயல்பாக அமைந்திட காரணமாக அமைகிறது.
- இயற்கை – செயற்கையால் உருவாகும் கழிவுகளின் “சுத்திகரிப்பு சீரமைத்தலுக்கு தேவையான இயற்கைத்தொடர்புகளுடன் இணைப்பு” தருகிறது.
- இயற்கை அமைப்புகள் பாதுகாப்பான முறையில் இயங்குவதற்கு உதவுகிறது.
- தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்களின் வாழ்வாதாரம் சீராக அமைவதற்கு மூல காரணமாக அமைகிறது.
- இயற்கையில் செயற்கை அமைப்புகளை உருவாக்கிட மனிதர்களுக்கு பேருதவியாக அமைகிறது.
- கோள் சுழற்சி இயல் சீராக இயங்கிட உதவுகிறது.
- பகல் – இரவு கால அளவுகள் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு தேவையான அளவில் இயங்கிட உதவுகிறது.
- கோள் ஈர்ப்பு விசையின் தன்மை சீரான தன்மையில் அமைந்திட உதவுகிறது.
- மின் காந்த அலைகளின் பாதிப்பில் இருந்து மண் மூலக்கூறுகள் பாதுகாக்கப்படுகிறது.
- மின் காந்த அலைகளின் பாதிப்பில் இருந்து நீர் மாசு அடைதல் நிகழாது இருக்க உதவுகிறது.
- மின் காந்த அலைகளின் பாதிப்பில் இருந்து தாவரங்கள், உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.
- கோளின் வெப்பம் – குளிர்ச்சியை சீரமைக்க உதவுகிறது.
- கோள் பாதுகாப்பிற்கு உரிய பாதுகாப்பு வளையம் பாதுகாக்கப்படுகிறது.
- கோள் மீது விண் கற்கள் விழும் அபாயத்தில் இருந்து பாதுகாத்திட உதவுகிறது. ……..
- சுருக்கமாக கூறினால் கோளின் பாதுகாப்புகள் அணைத்திற்கும் மூலாதாரமாக இயற்கை அமைகிறது.
நன்றி வணக்கம்.
Leave a Reply