பஞ்ச பூதங்களின் வாழ்வாதாரம்

அணைவருக்கும் வணக்கம்.

பஞ்ச பூதங்கள் நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது.

பஞ்ச பூதங்கள் ஐந்து,

 1. ஆகாயம்
 2. வெப்பம்
 3. காற்று
 4. மண்
 5. நீர்

பஞ்ச பூதங்கள் ஐந்தும் இணைந்து இயங்கும், இயக்கும் செயல்களுக்கு அடிப்படை ஆதார அமைப்பாக விளங்குகிறது.

பஞ்ச பூதங்கள் ஐந்தால் ஆன பிரபஞ்ச வாழ்வியல் அமைப்பு முறைகள் இயங்குவதற்கு அடிப்படை ஆதார அமைப்பாக “உயிர்” விளங்குகிறது. உயிர் பஞ்ச பூதங்களின் இயக்கங்கள் வாழ்வியல் முறைகளில்

 • பரிணாம வளர்ச்சி இயலுக்கு உட்பட்டு இயங்குவது,
 • பரிணாம வளர்ச்சி இயலுக்கு துணையாய் (ஆதார அமைப்பு) இருப்பது

என இரு வகைகளில் உயிர் (உயிரின் மூலக்கூறுகள்) அமைந்திருக்கிறது. அவ்வாறு பரிணாம வளர்ச்சி இயலுக்கு (உட்படுவது, உட்படாதது) துணையாய், தூனாய் அமைந்திருக்கும் உயிரோடு இணைந்து இயங்கும் (இயங்குதல், இயக்குதல்) அமைப்பு முறைகளை “ஜட உயிர், ஜடமற்ற உயிர்” என்று அழைக்கிறோம்.

பஞ்ச பூதங்களின் இயக்கங்கள்:
பஞ்ச பூதங்களின் இயக்கங்கள் இரு வகைப்படும்.

 1. பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் இயக்கம்.
 2. பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்குதலில் இயக்குதலின் இயக்கம் ஆகும்.

1. பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் இயக்கம்: பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் இயக்கங்கள் அமைந்திருக்கிற அமைப்பு முறைகளில் பரிணாம வளர்ச்சி இயலுக்கு (கரு இயல் பரிணாம வளர்ச்சி) உரிய வாழ்வாதார (உயிரியல் வாழ்வாதாரம்) நிகழ்வுகள் நடைபெறாது.

உதாரணம்: சந்திரன். சந்திரன் (கோள்) அமைப்பை உற்று நோக்கினால்:* நீர் இருக்கிறது மழை இல்லை. நேரடியாக (குடி நீர்……) பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கிறது.

 • மண் இருக்கிறது தாவர, உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக இல்லை.
 • சுழற்சி இயல் இயக்கம் (மைய அச்சு) மிக மெதுவான வேகமாக இருக்கிறது.
 • பகல் – இரவு இருக்கிறது கால அளவுகளின் தன்மை வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக இல்லை.
 • சுழற்சி இயக்கம் இருக்கிறது. கோள் ஈர்ப்பு விசையின் தன்மை மிக குறைந்த அளவில் இருக்கிறது.
 • காற்று இருக்கிறது சுவாச இயலுக்கு ஏற்புடையதாக இல்லை.
 • வெப்பம் – குளிர் இருக்கிறது. தாவரங்கள்,உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்புடையதாக இல்லை. ……..சந்திரனில் ஜட உயிர் (பஞ்ச பூதங்கள்) இயக்கங்கள் இணைந்து இயங்குதலில் இயக்குதல் இயக்கங்கள் மிக மிக குறைவான அளவில் இயங்குவதே அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது.

உதாரணம்: சந்திரனில் நீர் இருக்கிறது, ஆவியாகிறது. ஆனால் மழை பொழியவில்லை. ஏன்……….
(காரணம் அறிவோமா……. அறிவோம் வாருங்கள் )

“ஜட இயக்கங்களோடு ஜடமற்ற இயக்கங்கள் இணைந்து இயங்கும் அடிப்படை கட்டமைப்பு இல்லாது இருக்கிறது”

2. பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்குதலில் இயக்குதலின் இயக்கம்: பஞ்ச பூதங்களின் இயக்கங்களில் இயங்குதல் இயக்கங்கள் – இயக்குதல் இயக்கங்களோடு இணைகிற போது தான் பரிணாம வளர்ச்சிக்கு (கரு இயல் பரிணாம வளர்ச்சி) உயிரியல் வாழ்வாதாரத்திற்கான இயற்கை கட்டமைப்பு அமையும் என்பதை அறியவேண்டும்.

உதாரணம்:

பூமி. பூமி (கோள்) அமைப்பை உற்று நோக்கினால்:

 • நீர் இருக்கிறது ஆவியாகிறது, மழை பொழிகிறது. குடி நீருக்கும், வாழ்வியல் வளர்ச்சி இயலுக்கும் பயன்படுகிறது.
 • மண் இருக்கிறது தாவரங்கள், உயிரினங்கள் வாழ்வாதார இயலுக்கும், மண்ணில் மடியும் பொருள்களுக்கு பரிணாம சுழற்சி இயல் இயக்கத்தை தருகிறது. மண்ணில் உயிரினங்கள், தாவரங்களின் இயக்கங்களுக்கு ஏற்புடைய நிலையில் கோள் ஈர்ப்பு விசை அமைந்திருக்கிறது.
 • பகல் – இரவு, வெப்பம் – குளிர், காற்றின் பனிகள், கோள் சுழற்சி இயக்கம்…… போன்றவை உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாகவும், ஜட இயல் பரிணாம வளர்ச்சி இயலுக்கும் ஏற்புடையதாக அமைந்திருக்கிறது.

தீர்வுகள்:

பூமி
பூமியில் ஜட இயக்கம் – இயங்குதலில் இயக்குதல் பனிகள் இயல்பாகவே நடைபெறுகிறது. ஆதலால் பூமியில் உயிரியல் வாழ்வாதாரம் நிறைவாக அமைந்திருக்கிறது.

சந்திரன்
சந்திரனில் ஜட இயக்கம் – இயங்குதலில் இயக்குதல் பனிகள் மிக மிக குறைவான தன்மையில் நடைபெறுகிறது. எனவே சந்திரனில் ஜட உயிர் இயங்குதல் பனியில் இயக்குதல் பனிகளை நாமே உருவாக்க வேண்டும்.

ஜட இயக்கம் = இயங்குதல் + இயக்குதல்

உயிரியல் வாழ்வாதாரம் = ஜட உயிர் இயக்கம் + ஜடமற்ற உயிர் இயக்கம்

“ஜட இயலுக்கும் – ஜடமற்ற இயலுக்கும் இணைப்பு சக்திக்குரிய இயக்க இயலாக ‘உயிர் மூலாதார அமைப்பே மைய காரணமாக’ அமைந்திருக்கிறது”.

பஞ்ச பூதங்களைப்பற்றி மேலும் அறிவோம். நன்றி, வணக்கம்.