உயிரியல்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு இயக்கங்களையும் அறிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்டால் பல்வேறு இரகசியங்களை அறிய இயலும். அதாவது பிரபஞ்சம் பஞ்ச பூதங்கள் எனும் ஐம்பெரும் கட்டமைப்புகளுக்குள் உள்ளடக்கியது என்பதை அறிவோம்.

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உயிரியல் (மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள்) வாழ்வாதாரம் என்பது பூமி எனும் கோள் அமைப்பில் மட்டும் இருப்பதாக நினைக்கிறோம். அதற்கு காரணம் மிக மிக நீண்ட காலமாக பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதும், இங்கேயே நமது (மனிதர்கள்) உறவுகளும், உயிரியல் (உயிரினங்கள், தாவரங்கள்) தொடர்புகளும் தொடர்ந்து கொண்டிருப்பதே காரணமாகும். இக்கருத்து என்பது விஞ்ஞானத்தை மையபடுத்தியதாகும்.

விஞ்ஞானத்தை கடந்து நிற்கும் இதிகாசங்களும், புராணங்களும் பூமியிலும், பிற கோள்களிலும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் போன்றவற்றோடு வாழ்ந்த நிகழ்வுகளை நூளேடுகள்…..வாயிலாக கூறுவதை காணலாம்.
பிரபஞ்ச உயிரியல் அமைப்பு முறைகளை அறிவதற்கு முன்பு நாம் இது வரை பூமியில் வாழ்ந்து வரும் உயிரியல் அமைப்பு முறைகளை அறியலாம்.

உயிரியல் அமைப்பு முறையில் 3 விதமாக அமைந்திருப்பதை காண இயலும்.
1. ஆன்
2. பெண்
3. ஆன் – பெண் இரண்டிலும் இரண்டும் அற்றது. அதாவது உருவத்தில் ஆன் அல்லது பெண் உருவத்தை ஒத்து இருப்பதும் கல்வி, தொழில், பாசம், நட்பு போன்றவற்றில் இணைந்து இருந்தாலும், பரிணாம (வம்சா வழி உருவாக்குதல் – குழந்தை பேறு) வளர்ச்சி வாழ்வியல் முறையில் இயலாத முறையில் இருப்பது என மூவகை அமைப்பில் அமைந்துள்ளது.

பிரபஞ்ச இயக்கத்தை பொறுத்தவரை ஜட உயிர், ஜடமற்ற உயிர் என இரு வகை இயக்க தொடர்புகள் இருப்பதை நாம் கேள்வி பட்டிருப்போம்.
ஜட – உயிர், ஜடமற்ற – உயிர் எனும் இரு வகை உயிரியல் அமைப்பு முறைகள் பிரபஞ்ச இயக்கங்களில் தொடர்பு கொண்டிருப்பதை காணலாம்.

நாம் வாழும் இந்த பிரபஞ்ச கட்டமைப்பில் இரு வகை இயற்கை கட்டமைப்பில் மூன்று வகையான பிரிவுகளில் இரு வகை (ஜட – உயிர், ஜடமற்ற – உயிர்) உயிரியல் அமைப்பு முறைகள் அமைந்திருப்பதை அறியலாம்.

இரு வகை இயற்கை கட்டமைப்பு:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் வாழ்வியல் முறைகளுக்கு இயற்கை கட்டமைப்பு என்பது அவசியமாகவும், ஆதாரமாகவும் அமைந்திருக்கிறது. அவை இரு பெரும் பிரிவுகளாக அமைந்துள்ளது.

1. ஜட இயற்கை அமைப்பு
2. ஜடமற்ற இயற்கை அமைப்பாக அமைந்துள்ளது. இவ்விரு அமைப்புகளையும் தெளிவாக புரிந்து கொள்ள முயற்சித்தால் மாத்திரம் பிரபஞ்ச இயற்கை இயல் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of